பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாங்கி கொண்டுநிலை கூறல், (இ- ள்) தலைவனுயிரைத் தாங்கிக் கொண்டு நிற்கு நிலைமையாகிய மொழியைப் பாங்கி கூறுதல். ஆகுங் கருமமின் றேதெனில் யான்சென் றடுத்தடுத்துன் னோகுங் கரும நுவலுவ வன்னவ ணுண்டிறனும் வாகும் பட்ைத்தபு மான்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி லீகும் பதிலறித் தேற்பன காணென் னியலரசே, (; ; // இவற்றுள் தலைவன் கூற்றாயின வெல்லா மடற்கூற்றிற்கும் பாங்கி கூற்றாயின வெல்லா மடல்விலக்கிற்கு முரியன. தலைவியிளமைத்தன்மை பாங்கி தலைவற்குணர்த்தல். (இ-ள்.) பாங்கி தலைவியனது மங்கைப்பருவ நிரம்பாமையைத் தலைவனுக்குக் கூறுதல், முலையோ பருத்தில் மொழியோ நிறைந்தில முற்றுமங்கண் கொலையோ பழகில கூந்தற் றிகைந்தில கூடலர்வெண் டலையோ டமரயிர் கோன்ஷம்சுத் தாசின் றடத்துறுபைங் கலையோ வுடுக்கறி யாளிவண் மாட்டென் கவலுவகே. (f/2) தலைவன்றலைவி வருத்தியவண்ணழரைத்தல் (இ-ஸ்.) அங்ங்னங் கூறிய இளமைப்பருவமே தன்னை வருத்திய விதத்தைத் தலைவன் பாங்கிக்குக் கூறுதல். புள்ளிற் பொலியும் புணர்முலை யீர்மதன் பூவரும்போ டெள்ளின் முலையரும் பேவுற் றிழைத்துழ லென்னுயிர்க்கே விள்ளிற் பெருமத வேள்வும்சுத் தாசீன் மிளிர்வரைவாய் முள்ளின் முனையென மொய்த்துள தாற்கொலை மொய்விழிக்கே (1/3) பாங்கி செவ்வியருமை செப்பல். (இ-ஸ். பாங்கி தலைவியின் சமையத்தினருமை தலைவனுக்குக் கூறுதல். சுனையுந் தடமுஞ் சுகமும் பணியுந் துணியுநல்லம் மனையும் பொழிலு மறந்தன ளேயுற்ற மாற்றலர்மேன் முனையும் பெருந்தளத் தோன்ஷம்சுத் தாசீன் முதிர்சிலம்ப நினையும் படியவட் கிங்கொன்கொ லோயா.ணிகழ்த்துவதே. (114) தலைவன் செவ்வியெளிமை செப்பல். - (இ-ஸ்.) தலைவன் றன்குறை சொல்லுதற்குத் தலைவி சமையமெளிதெனக் கூறுதல். 101