பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருகான் மறந்துரைத் தாலுமென் பேருவந் தோடிவந்துன் னருகாய்த் தழுவி யறைகில ளேது மணிமகுடந் தருநாற் றழும்புடைக் கோன்ஷம்சுத் தாசீன் றடவரைவா யிருகா லியம்பிலென் னாமிவை யாமுனிங் கேய்ந்திடுமே. (//5) பாங்கி யென்னை மறைத்தபின்னெளிதென நகுதல். (இ-ஸ்.) நீவி ரிருவரு மெனக்குத் தெரியாமன் மனமொத்துக் கலந்தபின் இக்களவொழுக்க மொழுகுதற் கினியெளிதென நகையாடிப் பாங்கி கூறுதல்; எனவே யென்னையன்றி யுங்கள் களவொழுக்க நிகழாதென்பது குறிப்பாற் பெறப்பட்டது. நகமுஞ் சதையுமுண் ணண்ணினுந் தோரை நடுவிருந்துள் ளகமும் புறமு மளிப்பதொத் துங்க ளருநினைவுக் கிகமும் பரமும் புகழ்ஷம்சுத் தாசி னெழிற்சிலம்ப சுகமும் பொலிவு மெனையல துண்டுகொல் சொல்லுதற்கே. (//6) அந்நகை பொறாஅதவன் புலம்பல். (இ-ள்.) பாங்கி நகையாடிக் கூறுதல் சகியாமற்றலைவன்வருந்திக் கூறுதல். வெள்ளத்துண் மூழ்கி மிதக்குநர் மேற்கல் விரைந்திருத்திப் பள்ளத்து எாழ்த்துமப் பான்மையன் றோசெழும் பைந்தமிழோ ருள்ளத்துள் வாழும்பு மான்ஷம்சுத் தாசீ னுலகவள்கட் கள்ளத்துண் மாழ்கு மெனைநகைத் திங்ாவன் கலக்குவதே. (/ / Z) பாங்கி தலைவனைத் தேற்றல். (இ-ள்.) அங்ங்னம் வருந்தியதலைவனைப் பாங்கி நின்கருத்து முடிப்பலெனத் தெளிவித்தல். என்னுயி ரன்னவ ளின்னுயிர் யானென் றிருப்பதல்ல்ாற் பின்னுயிர் வேறொன் றிலைசொலு மன்னதிப் பேருலகந் தன்னுயி ரென்னுமெம் மான்ஷம்சுத் தாசீன் றடநகரோய் நின்னுயிர் வாடி நிலைகுலை யேல்சுக நேர்வருமே. (//8) டாங்கி கையுறை யேற்றல். (இ. ஸ்.) தலைவன் கொடுத்த காட்சிப் பொருளைப் பாங்கியங்கீகரித்து வாங்கிக் கொள்ளுதல். - விதியே வலிதென மேதினி கூறுமம் மெய்ம்மொழிசம் மதியே யெனவித் தழையான் மதித்தனம் வான்புவிக்கோர் 1 O2