பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதியே யெனவொளிர் வோன்ஷம்சுத் தாசின் பனிவரைவாய்த் துதியே பயிற்கரத் தோயருள் வாய்சென்று சூட்டுதற்கே. (//9) கிழவோனாற்றல். - (இ~ள்.) தலைவன்துன்ப நீங்கிச் சொல்லுதல். பொய்க்கொண்ட வன்மொழி போதித் தலைவித்த புன்மையெல்லா மெய்க்கொண்ட வன்பன்றி வேறிலைப் பூந்தலை வேட்டிருநீர்ச் செய்க்கொண்ட ஹாமீம் புரஷம்சுத் தாசீன் சிலம்பிலெம்மைக் கைக்கொண்ட வட்குற்ற கைம்மாறு யாதொன்றுங் காண்கிலமே. (20) இவற்றுள் பாங்கி கூற்றாயின வெல்லால் குறைநேர்தற்குத் தலைவன் கூற்றாயின வெல்லா மடற்கூற்றொழிதற்கு முரியன. இறைவன் றனக்குக் குறைநேர் பாங்கி இறைவிக்கவன்குறையுணர்த்தல். (இ-ன்.) தலைவன் வருத்தந்தணிப்பலென்று சொல்லிய பாங்கி அவ்வருத்தத்தைத் தலைவிக்குக் கூறுதல். தழையார் கரமுந் தளர்வா ருடலுந் தனிமையுமாய்ப் பழையாரி லோர்புதி யார்வரு வார்வந்து பற்றலர்போன் மழையார் திருக்கர மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி னுழையா ரகலா ருரையார் கருத்தென்கொ லோது.தற்கே. (/2/) இறைவி யறியாள் போன்று குறியாள் கூறல். (இ-ஸ்.) பாங்கி யிவ்வார்த்தை கூறவே தலைவி கேட்டுத் தானொன்று மறியாள் போல மனத்திற் கருதாத வேறொன்றைக் கருதிக் கூறுதல். தினமே தருங்கரச் சேய்ஷம்சுத் தாசீன் செழுமலைச்சீர்க் கனமே புகலாக் கருதல ரோடிக் கருத்தழிந்து - வனமே யிடனா வளரிலை காய்கனி மற்றுமடுத் - தினமே யலைவரென் னேந்திழை யிரிவ் விரும்பொழிற்கே. (/22) பாங்கி யிறையோற் கண்டமை பகர்தல். (இ-ள். பாங்கி தலைவ னின்வயத்தனாக வந்தவதனைக் கண்டேனென்று கூறுதல. . பாருங் ககனும் பகர்ஷம்சுத் தாசீன் பனிவரைவா யாரும் புகழு மணிமுலை யீரும் மருநலம்வேட் 103