பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுத்தற் கருமை மாட்டில். (இ-ஸ்.) இவ்வாறு பாங்கி கூறிய சொற்கட்கு விடையின்மையால் இனி அத்தலைவன்வரி லென்னான் மறுத்தற்கரிதெனப்பொருத்திக்கூறுதல். மாட்டல் - பொருத்தல். ஏவுஞ் சலித்த விழியி ரிறைதழைக் கெம்மறிவு யாவுஞ் சலித்தபு மான்ஷம்சுத் தாசீ னிருஞ்சிலம்பிற் காவுஞ் சலித்தசெங் கையுஞ் சலித்தபொய்க் கட்டுரைக்கோர் நாவுஞ் சலித்தவிந் நாமுஞ் சலித்துன்க ணண்ணினமே. (128) தலைவன் குறிப்புவேறுக நெறிபடக் கூறல். (இ-ள்.) தலைவனெண்ணுங் குறிப்பு நம்பாலிரப்பவன் போற்றோற்றவில்லை. வேறு நினைப்பானாகத் தோன்றியதென்றொழுங்குபடப் பாங்கி கூறுதல். வினையாற் பயனும் விளைவாற் பொருளும் விளங்கலொத்தோர் பனையாற் கனிவரும் பாரென்ப ரன்பர் பகையனைத்து முனையாற் றெறுமயில் வேள்வும்சுத் தாசின் முதிர்கிரிசேர் நனையார் நறுங்குழ லீர்பொரு ளேதவர் நாட்டுரைக்கே. (/29) பாங்கி தலைவியை முனிதல். (இ-ள்.) தலைவி யொன்றுக்கு மறுமொழிகொடாளாக அவளைச்சினந்து பாங்கி கூறுதல். - அறியா தறைந்தே னறிந்தே னருமைநிற் காமலரைக் குறியா தடக்குங் குழுவோர்க் குரைகுறை கூறுபன்னூ னெறியா யுணர்ந்தமிக் கோன்ஷம்சுத் தாசி னெடுவரைசேர் பொறியா ரிளமுலை யாய்கும்பிட் டேன்சொற் பொறுப்பதற்கே. (#30) தலைவி பாங்கியை முனிதல். (இ-ள்.) அங்ங்னம் கூறிய பாங்கி சொற்களைப் பொறாதவளாய்த் தலைவி பாங்கியைக் கோபித்துக் கூறுதல். வெறுக்கும் பழமொழி விண்டென தாவி மெலிவுறமெய்க் குறுக்குங் குணத்தனங் கேகுல நீர்மை குறித்தினித்தெவ் வறுக்கும் பெருமுரத் தான்ஷம்சுத் தாசீ னருட்கிரிவாய் மறுக்கு முரைதர வோகொள வோசொலென் வாயகத்தே. (/3) தலைவிகையுைற யேற்றல். (இ-ள்.) அங்ங்னங் கூறியபின் இனி, பாங்கியையன்றியொன்று முடியாதென்று கருதி அவள் கொடுத்த கையுறைப் பொருளைத்தலைவி வாங்கிக் கொள்ளுதல். 105