பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறுவுதல் என்பன தலையாயவை ஆகும். ஷம்சுத்தாசீனவர்கள் கி.பி. 1911-ஆம் ஆண்டிலே ஹாமீம்புரம் பகுதியில் தமது இல்லமாகிய பங்களாவிற்கு மேற்குப் புறத்தில் 'V.S.T. தமுஸ்தாசிம் தரகனார் ஹாமீம் பள்ளி மதரஸா' என்ற பெயரிலான இறையில்லமும் அத்துடன் இணைந்த அரபி பாட சாலையையும் நிர்மாணித்து அவற்றின் அக்தார், இனாம்தாராகத் தாமே இருந்து அவை சார்ந்த கைங்கரியங்களை நிர்வகித்து வந்தார். பள்ளி மதரஸாவின் பெயரால் மேலும் பல அறப் பணிகளும் ஆற்றி வந்தார். தமது ஆயுளுக்குப் பின்னரும் தமது வழிமுறையினர் அவற்றை நிர்வகித்தும் அவ் அறப்பணிகளை தொடர்ந்து நடத்தியும் வர வேண்டுமென்ற சீரிய நோக்கமும் விழைவும் - கொண்டவராய், பள்ளி மதரஸாவின் பரிபாலனத்திற்காகப் பெருநிதிப் பெறுமதியுள்ள தக்க சொத்துக்களை மானியமாகத் தத்தம் செய்து, அதனை கி.பி.1931-ஆம் ஆண்டிலே அறக்கட்டளையாக சாசனமும் (வக்பு) பிறப்பித்துள்ளார். நிலை பெறும் நினைவு தமது ஞானாசிரியர் நல்லடக்கம் செய்விக்கப்பட்டிருக்கும் 'கோட்டாறு ஞானியார் அப்பா தர்கா"வில் நியமமாக நடைபெற்று வரும் கிரியைகளுக்கென, குமரி மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளதும் மிகுந்த வருவாய் வரத் தக்கதும்ான சொத்துக்களை ஷம்சுத்தாசீனவர்கள் நிபந்தமாக வழங்கியுள்ளார். - - - ஞானியாரவர்கள் மேலப்பாளையத்திற்கு வருகைதந்து, கலிமாக்குளக் கரையில் (ஹாமீம்புரம் அருகே) தங்கியிருந்த இடத்தில் “ஞானியார் அப்பா தைக்கா' வையும் மேலப்பாளையம் பெரிய தெரு அருகில் (ஆஸாத் ரோட்டின் மேல் புறம்) ஞானியார் அப்பா தர்கா பள்ளி'யையும் தொண்ணுாறு ஆண்டுகளுக்கு முன்னர் ஷம்சுத்தாசீனவர்கள் பாங்குற கட்டுவித்தார். இத்தலங்களில், ஞானியார் பாடல் பாராயணம், குருமகான் துதி, நியம நிஷ்டை யனுஷ்டானங்கள் ஆகியன இன்றளவும் இடையறாது நடத்தப் பெற்று வருகின்றன. நல் மரம் பழுத்தன்ன நன்கொடையாளர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'சீனம் சென்றேனும் சீர் கல்வி பெறுக" என்றருளினர். கல்வி பெற வழியில்லாத ஆதரவற்ற ஏழை, எளிய மாணவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் போன்றவற்றை ஷம்சுத் தாசீனவர்கள் இலவசமாக வழங்கி, தக்க ஆசிரியர்களைக் கொண்டு 9