பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொங்கு மயலஞர் பூட்டியென் னின்பப் புதுநலங்கொண் டெங்கும் புகழுநல் லோன்ஷம்சுத் தாசி னிருஞ்சிலம்பிற் றங்கு மெனைமறந் தன்னையர் சாருமுன் சார்ந்தவிந்த மங்கு மிரவிடை வந்தொரு முத்தம் வழங்கிலரே. (/48) தலைவியைப் பாங்கி கழறல். (இ- ள்.) பாங்கி தலைவியை நீ வருந்துவது முறைமையன்றெனக் கட்டுரைத்தல்-கழறல்-கட்டுரை, இடித்துக் கூறல், உறுதிச்சொல். நஞ்சு மமுது நனவு மறப்பு நலனலலொத் தஞ்சுஞ் செழுந்தனத் தஞ்சமன் னிருள் ளழுங்கலென்று மிஞ்சும் பெரும்புகழ் வேள்வும்சுத் தாசீன் வியன்சிலம்பி லொஞ்சும் பிரிவும் புனர்ப்பு முளவுவந் தோது.தற்கே. (149) தலைவி ழன்னிலைப் புறமொழி மொழிதல். (இ-ள். பாங்கி யெதிரே நிற்கவுந் தலைவி அவள்மேல் வெறுப்பாலவளை நோக்கிக் கூறாது புறமாய்க் கூறுதல். வெறியார் மயலும் விளைவுஞ் சிறையு மிலைந்துகனற் பொறியா யுழலுமென் புன்கனுற் றோரன்றிப் போந்தமற்றோ ரறியார் மலடி யறியாள் பிரசவ வல்லலென்று நெறியா யுயர்தவத் தோன்ஷம்சுத் தாசி னெடுவரைக்கே. (/50) தலைவி பாங்கியொடு பகர்தல். (இ-ஸ்) வெறுப்பால் முன்னிலைப் புறமொழிகேட்ட பாங்கி தலைவியை யுபசரித்தலாலவ்வெறுப்பு நீங்கிப் பாங்கியொடு தலைவி கூறுதல். சற்றும் பிரியேன் றரியே னெனத்தடுத் தார்மகுட மெற்றுந் திருப்பதத் தோன்ஷம்சுத் தாசி னிருஞ்சிலம்பர் சொற்றுங் கலந்துந் தழுவியு முத்தியுஞ் சூழ்ந்தவெல்லா முற்றும் பழுதாய் முடிந்தகொ லோவென்றன் மொய்குழலே. (/5/) தலைவியைப் பாங்கி யச்சுறுத்தல். (இ-ஸ்.) அங்ங்னங் கூறியுந் துன்பமுறுந் தலைவியை அது நீங்குமாறு பாங்கி பயமுறுத்திக் கூறுதல். புனமே மறந்துறு புள்ளு மறந்தொரு போராசின் கனமே நினைந்துழல் கன்னிநல் லாயன்னை கானினருட் டனமே பெறுபெரு மான்ஷம்சுத் தாசின் றமிழ்ச்சிலம்பி னினமே விடுத்தில் லிடமே தருமென் னியற்றுவையே. (/52) 1 1 O