பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்கற்கருமை தலைவி நினைத்திரங்கல். (இ-ஸ்.) தலைவன் றன்னைவிட்டு நீங்கற்கருமையைத் தலைவி நினைந்து தன்னுள்ளிரங்கிக் கூறுதல். ஆவியு மெய்யுமென் றொன்றிரண் டாயெம்மை யாக்கியக மேவிய வன்மையு மென்மையு மாயிடை வித் தளயில் தாவிய வாய்தந்தந் தோன்ஷம்சுத் தாசின் றமிழ்க்கிரிவாய்க் கூவிய மாமுதல் சார்பொழித் தான்மெய் குறுகுதற்கே. (/53) தலைவிக்கவன் வரல் பாங்கி சாற்றல். (இ-ன்.) அங்ங்ன மனமிரங்குந் தலைவிக்குத் தலைவன் வருதலைப் பாங்கி கூறுதல். சீர்தரும் வள்ளப்பு மான்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பிற் றேர்தரு மோதை திருவே தெரியினிச் செப்புமத னார்தரு காளங் கண்ணகுடை தேர்முர சாரமிழ்தா யேர்தரு மாறிலை நின்னர சார்க்கு மிதந்தருமே. (/54) சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுத்தல். இள்) தலைவன் சிறைப்புறமாகக் குறியிடத்துவரப் பாங்கி தங்களுக்குள்ள செறிப்பையறிவுறுத்திக்கூறுதல். சிறைப்புறம்-வெளிப்புறம். செறிப்பு-கானவர் தினைகொய்யப் புறத்தினில் வந்திருத்தல், மணியார் கலாப மயிலி ருழையிர் மகிழ்ந்துரையிர் பணியா ரிகுளைய ராடிட நீப்பப் பருத்தெழுமோர் திணியா கலப்புயச் சேய்ஷம்சுத் தாசின் செழுங்கிரியிற் கணியா ரலர்க்கண் கணித்தா ரெமக்கிலைக் காய்ப்புனமே. (/55) தோழி தலைமகற்கு முன்னிலைப்புறமொழி மொழிந்தறிவுறுத்தல். - (இ- ள்.) தலைவன் முன்னிலையாய் நிற்பத் தோழி தலைமகனைக் காணாதவள்போலப் புறமொழியாய்ப் புட்கள் விலங்குகளை நோக்கிக்கூறுவாள் போன்று செறிப்பறிவுறுத்தல். நிறந்தாங் குழைகாண் மயில்காள் கிளிகா ணிதமுமலர்ப் புறந்தாழ் கருங்குழற் பொன்னனை யாளைப் புணர்ந்துசுகஞ் சிறந்தார் மணிமுடிச் சேய்ஷம்சுத் தாசீன் சிலம்பிலெம்மை மறந்தாலு நீவிர் மறவா திருமொரு வந்தனமே. (/56)