பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாங்கி தலைமகன் முன்னின்றுணர்த்தல். (இ-ள்.) தோழி தலைவனுக்கெதிரேநின்று தினையறுத்தலாலினியெம்மூர்க்குப் போவேம். இப்புனத்தின்கண் வருதலொழிகவெனக் கூறுதல். பலர்வாய்ப் புகழ்தரித் தோன்ஷம்சுத் தாசீன் பனிவரையிர் மலர்வாய் விளவரிந் தெம்மற வோர்புனம் வாரியிடு முலர்வாய்க் குரலி னுறைவரி திங்கென வோர்ந்தெமையு மலர்வா யகத்திற் கழைத்தன ரேகுது மந்நெறிக்கே. (157) பாங்கி முன்னின்றுணர்த்தியோம்படை சாற்றல். (இ-ள். அங்ங்ன முன்னின்று கூறிய பாங்கி யெம்மை மறவாமை வேண்டுமென்று கூறுதல். கண்மறந் தாலு மிமைமறந் தாலுங் களிமயில்கார் விண்மறந் தாலும் வெயின்மறந் தாலும் விரைமலர்வாய் பண்மறந் தாலும் பகர்ஷம்சுத் தாசீன் பதியிலுயிர் மண்மறந் தாலு மறவா துறவெமை வாழ்த்துதுமே. (/58) கிழவோன்றஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தல். (இ-ள்.) இவ்வாறு கூறக்கேட்ட தலைவன் வேறோர் பற்றுக்கோடு பெறாது நெஞ்சுடன் கூறுதல். ஆந்தனை யும்புனங் காத்தறி வாதி யனைத்துமள்ளி யேந்தனை யார்தொழ வின்றகன் றாள்பின் னிரும்புவிக்கோர் வேந்தனை யான்விறல் வேள்வும்கத் தாசின் வியன்சிலம்பிற் போந்தனை யான்மன மேயினி யென்றிவண் போதுவையே. (159) இவற்றுள் கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம்பொழுது கண்டிரங்கலும் பாங்கி புலம்பலுந்தலைவனிடத்தலைவி வருந்தலு முன்னிலைப்புறமொழிமொழிதலுந் தலைவி பாங்கியொடு பகர்தலும் நீங்கற்கருமைதலைவி நினைந்திரங்கலுங் கிழவோன் றஞ்சம்பெறாது நெஞ்சொடு கிழத்தலு மாகிய வேழு மிரங்கற்கும், தலைவியைப் பாங்கி கழறலும் பாங்கியச்சுறுத்தலும் பாங்கி தலைவிக்கவன்வரல் சாற்றலுமாகிய மூன்றும் வன்புறைக்கும், பாங்கி சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுத்தலு முன்னிலைப் புறமொழி மொழிந்தறிவுறுத்தலு முன்னின்றுணர்த்தலு மோம்படை சாற்றலுமாகிய நான்கு மிற் செறிப்புணர்த்தற்கு முரியன. முன்னைய வேழில் நெஞ்சொடு கிளத்தலொழிந்தவாறும் வரைதல்வேட்கைக்கும். பின்னை நான்கும் வரைவு கடாதற்கு முiயன. - ஒருசார் டகற்குறி முற்றிற்று.