பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகற்குறியிடையிடுே. அஃதாவது: பகற்குறிக்கண்வந்த தலைமகன் குறிக்கட் செல்லாது இடையீடு பட்டுப் போதல். இடையீடு தடை, அது விலக்கல் சேறல் கலக்கமென மூவகைப்படும்; அவை வருமாறு: இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கல். (இ-ஸ்.) இனி அடிக்கடி தாய் வருவள். நீவந்தாற் பழியுண்டாமென்று தலைவனைப் பகற்குறியிடத்துவராதே யென்று பாங்கி கூறுதல். அன்போ டருள்குணத் தான்ஷம்சுத் தாசி னருஞ்சிலம்பின் முன்போ லடுத்தடுத் தண்ணலண் னேலென்று மொய்புனத்தி னென்போர் மறவ ரினிதிருந் தாரின்னு மேந்திழையாற் பொன்போ லொளிருட லன்னைபல் கால்வந்து போதுவளே. (160) இறைவியைப் பாங்கி குறிவரல் விலக்கல். (இ-ஸ். பாங்கி தலைவியை நோக்கி யுன்னுடைய் தனபாரங்களினழகை யையுற்றுத் தாய் பார்த்துக் கவல்கின்றனள். இனி யிப்புனத்தில் வாலொழிவாயென்று கூறுதல். இரப்பார்க் களிக்குமெம் மான்ஷம்சுத் தாசி னிருஞ்சிலம்பிற் பரப்பார் மதர்விழிப் பாவையன் னாயுன்றன் பாரமுலைச் சுரப்பார் பொலிவுமெய்த் தோற்றமு நாற்றமுஞ் சூழ்ந்தனை தன் கரப்பார் மனங்கனன் றேகின எளின்றினிக் காவகமே. (/6/) இறைமகளாடிட நோக்கியழுங்கல். (இ-ள்.) தலைவிதான் விளையாடிய விடங்களை விட்டுப் பிரிதற்கஞ்சி வருந்தல். ஆடித் திரிந்த சுனையும் பொழிலு மருந்தடமுந் தேடிக் குறுகுநர்க் கென்றெரித் தென்னையென் செப்புமுள்ள நாடித் தருந்திரு மால்ஷம்சுத் தாசி னளினவெற்பிற் கூடிப் பிரிபவர்க் கில்லையெக் காலுமெய்க் கோனிலையே. (162) பாங்கி யாடிடம் விடுத்துக் கொண் டகறல். (இ, ள்.) தலைவியைப் பாங்கி விளையாடிடத்தைவிட்டுத் தம்மூர்க்குக் கொண்டுபோதல், கார்கண் டுவக்கு மயில்காள் கிளிகாள் கனகமணிப் போர்கண் டுவந்தபு மான்ஷம்சுத் தாசீன் புனிதவெற்பி