பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவுக்குறி. அஃதாவது: தலைவன் தலைவியை யிரவுக்குறியிற் கூடுதல்; அது - வேண்டல் மறுத்தல் உடன்படல் கூட்டல் கூடல் பாராட்டல் பாங்கிற் கூட்டல் உயங்கல் நீங்கல் ஆகிய ஒன்பது வகைப்படும்; அவை வருமாறு: இறையோனிருட்குறி வேண்டல். - (இ-ள்.) தலைவன் இருட்குறியை விரும்பிப் பாங்கியுடன் கூறுதல். தருந்தா மரைக்கரத் தான்ஷம்சுத் தாசீன் றமிழ்ச்சிலம்பி லிருந்தாரை மேக மெழுந்தது வானி லிரவியுமத் திருந்தார் கலியகஞ் சேர்ந்தனன் கங்குலுஞ் சேர்ந்ததுங்கள் விருந்தாக வந்தனன் மெல்லிதல் லிரிந்த வேளையிலே, (/67) பாங்கி நெறியினதருமை கூறல். (இ-ள்.) அது கேட்ட தோழிதலைவன் வரும் வழியில் சிங்கமுதலிய மிருகங்கள் சஞ்சரித்தலால் அவ்வழி வரலரிதென்று கூறுதல். திண்டந்த மற்புயச் சேய்ஷம்சுத் தாசின் செழுஞ்சிலம்பி னொண்டந்த வெண்கலை வண்கலை தூர்த்தற் குவந்தெழுமுச் செண்டந்த பல்கய மெற்று மரிவனத் தின்றெதிர்ந்திங் கண்டந்த வல்லிருட் போதுறு மாறென்கொ லாண்டகையே. (/68) இறையோ னெறியின தெளிமை கூறல். (இ-ள்) அங்ங்னங் கூறிய வழியிலுள்ள மிருகங்களுக்கஞ்சேனாதலால் அவ்வழி வருதலிலேசென்று தலைவன் பாங்கிக்குக்கூறுதல். - சினமா ரயிற்படைச் சேய்ஷம்சுத் தாசீன் சிமையமன்னாட் டனமாங் கரிக்குந் தடமாம் பணிக்குந் தழைத்தகுழ லினமா மிருட்கு மிடையா மரிக்கு மிடைவதல்லால் வனமார் விலங்கின் வகைக்கிடை யேனென்று மாதரசே, (/6%) பாங்கி யவனாட் டணியியல் வினாதல். (இ-ள்.) தலைவனது நாட்டுப்பெண்களணியும் மணியையுமியலையும் பாங்கி வினாவுதல். ஆடும் பொழிலு மணியுந் தொடையு மணிநலனுந் தேடுஞ் சுனையுந் திமிரு மணமுமித் தேயமெங்குஞ் சூடும் பெருந்திறல் வேள்வும்சுத் தாசின் சுகிர்தவெற்ப நாடும் படியெவை யோவுங்க ணாட்டிள நாரியர்க்கே (/70) 1 iS