பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவனாவணாட் டணியியல் வினாதல். (இ-ள். பாங்கி குறிப்பறிந்து தலைவன் அவளுடைய நாட்டிலுள்ள வணிகலன் முதலியவற்றை வினாவுதல். குறிப்பறிதல் வேண்டுவன கொடுத்தற்கென்க. என்னாட் டணியிய லெல்லா மறிந்துனக் கென்பயன்செம் பொன்னாட் டணியியற் பூவைநல் லாய்செழும் புத்தமிழ்தின் சொன்னாட் டணியியன் மால்ஷம்சுத் தாசீன் சுடர்வரைவாய் நின்னாட் டணியிய னியே சொலப்பய னிச்சயமே. (/7/) தன்னாட்டணியியல் பாங்கி சாற்றல். (இ-ள்.) வெளி. x கழையார் தரளஞ்செங் காந்தளம் போது கரைத்தசந்தத் தழையா ரணிநலத் தந்தண்ண லேசெழுந் தண்பொழில்வாய் மழையார் திருக்கர மால்ஷம்சுத் தாசீன் மலையகத்தெம் மிழையார் சுனைபடிந் தாடுவ ரெல்லியெவ் ய்ாமத்துமே (/72) இறைவிக்கிறையோன் குறையறிவுறுத்தல். (இ-ஸ்.) பாங்கி தலைவனை யோரிடத்து நிறுத்திவிட்டுத் தலைவியிடத்திற் சென்று தலைவன்குறையை யறிவித்தல். கொல்லும் புலியுங் கொடுவரி வேங்கையுங் கூர்ந்தெழுந்து செல்லும் பெருவனத் தோர்தனி யாய்க்கங்குற் செவ்வியிற்போர் வெல்லும் பரிமத வேள்வும்சுத் தாசீன் வியன்கிரிக்குள் வல்லும் பொருதனத் தீர்வரு வார்க்கென் வழுத்துவதே. (f73) நேராதிறைவி நெஞ்சொடு கிளத்தல். (இ-ள்.) இவ்வாறு கூறக்கேட்டதலைவியியையாது தன்னெஞ்சுடன் சொல்லுதல். இருளும் புயலு மிபமு மரியு மெதிர்ந்துதம்மில் வெருளுஞ் சிறுநெறிக் கானடைந் தெம்மிறை மேவருமோ ரருளும் பொருளுமுள் ளோன்ஷம்சுத் தாசி னருங்கிரிவாய் மருளும் படிமன மேவலித் தாளொரு வன்கணளே. (/74) நேரிழை பாங்கியோடு நேர்ந்துரைத்தல். (இ-ஸ். நெஞ்சொடு கூறிய தலைவி தோழியோடுடன்பட்டுக் கூறுதல். உடலோ டுயிர்பொரு ளெல்லா மவரென் றுணர்ந்தவென்பாற் கடலோ பொருவாக் கருணைக்கண் னாளர் கனிந்தெழிற்றெவ் 116