பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறியுய்த் தகறல். (இ-ள்.) பாங்கி தலைவியைக்குறித்த காவிடத்திலே செலுத்தி நீங்குதல், தண்டா மரைமுலை நீலஞ்செங் கோங்கலி தன்சினைகண் டண்டா வெனினுமென் னாரணங் கேயழ காண்மைமுற்றுங் கண்டார் புகழ்பெரு மான்ஷம்சுத் தாசீன் கனகவெற்பிற் றொண்டா யெடுத்தமைப் பேன்வரு வேனில்லிச் சூழ்பொழிற்கே, (180) வண்டுறை தாரோன் வந்தெதிர்ப் படுதல். (இ-ள்.) தலைவன்தலைவியை நேரே வந்து காணுதல். நூலேணி யில்லைவி மானமு மில்லை நுவலும்விஞ்சை யாலேது மில்லையென் னாரணங் கேவிண்விட் டார்கலிமேற் கோலேற வாளுமிக் கோன்ஷம்சுத் தாசீன் கொழுந்தடத்துன் காலேணி யால்வந்த வாறெந்த வாறிந்தக் கங்குலிலே. //8/ル பெருமகளாற்றின தருமை நினைத்திரங்கல் (இ-ள்.) தலைவி தலைவன் வரும் வழியினதருமை நினைந்து வருந்துதல். சுழிக்கு நதிக்குந் துளியா ரருவிக்குஞ் சூழ்ந்தகராக் குழிக்குந் துணிந்திவ் வொருதனி யாண்மயல் கொண்டவல மொழிக்குங் குணப்பெரு மான்ஷம்சுத் தாசி னொளிர்வரைமுள் வழிக்குஞ் சினவாது வந்ததெவ் வாறென் மழைவள்ளலே, (/82) புரவலன்றேற்றல். (இ-ள். அங்ங்னம் வருந்திய தலைவியைத் தலைவன் றெளிவித்தல். சீர்கண்ட வண்ணல்பி ரான்ஷம்சுத் தாசீன் சிலம்பகத்துன் கார்கண்ட கூந்த லிருட்கிடை மின்னொளி கண்டணிகண் டேர்கண்ட மென்முலை யல்குற் றடங்கொளு மென்னையின்றத் நேர்கண்ட போதஞ்சு நாகங்க ளென்செயு நேரிழையே. (/83) புணர்தல் (இ-ள்.) வெளி. எடுக்க வெடுக்கக் குறையா வமுத விருநலங்கொண் டடுக்கப் படைத்தது வோமின்ன னாயுன்ற னாகமென்றுங் கொடுக்கப் பிறந்தபு மான்ஷம்சுத் தாசின் கொழுங்கிரிவ்ாய் மடுக்க மடுக்கவுண் மாறாச் சுகந்தந்து வாழ்வித்ததே. (/84) 1 1 8