பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சென்றிறைவனை வரவு விலக்கல். (இ-ள்.) தோழி தலைவியை மனையிற் சேர்த்த பின்பு தலைவன் பாற்சென்று இவ்விருளில் நீ வராதே யென்று விலக்கிக் கூறுதல். கன்மேற் பொருபுயத் தோன்ஷம்சுத் தாசீன் கனகதடத் தின்மேற் பொருமுலைக் கின்பவன் பாயிஷ் விரவிலொருத் தன்மேற் பொருபுலி வாழ்சிறு சாரலிற் சாரலினி யென்மேற் பொருபழி யின்றுவந் தாற்பழி யென்றைக்குமே. (/90) பெருமகன் மயங்கல். (இ-ள்.) பாங்கியில்வாறு இரவுக்குறி விலக்கிய சொற்கேட்டு தலைவன் மனங் கலங்கிக் கூறுதல். செலவே யொறுக்கும் வரவே விரும்புஞ் செகதலமந் நலவே மறந்தொரு நட்டுரை தாங்கியிந் நானிலத்தோர் குலவே வெரனவரு கோன்ஷம்சுத் தாசின் கொழுங்கிரிவா ழிலவே நிகர்த்தாய் மடந்தா யிதுகொல் லியல்புனக்கே. (/9/) தோழி தலைமக டுயர் கிளந்து விடுதல். (இ-ள்.) பாங்கி தலைவனுக்குத் தலைவிக்கு நேருந்துயரைக் கூறி நீஊர்போய்ச் சேர்ந்த செய்தியாமறியும்படி அடையாளங் காட்டென்று கூறி விடுத்தல். வெறியார் மலர்த்தொடை வேள்வடிம்சுத் தாசீன் வியன்கிரிவாய்ப் பொறியா ரரவப் பொதும்பிருட் சாரலிற் போதுமுன்னூர் நெறியா லலமரு நேரிழைக் கங்ங் னிலைக்கினுன்றன் குறியா லுயிரளித் தாளுதி போதியென் கொற்றவனே. (/92) திருமகட்புணர்ந்தவன் சேறல். (இ-ஸ்.) தலைவியைக் கலந்த தலைவன்றன்னுர்க்குப் போதல். தொடிக்கடி செய்கரத் தோகை மருங்கெழிற் சூழ்ந்தாசர் முடிக்கடி தந்தபெம் மான்ஷம்சுத் தாசின் முதிர்கிரிவா யடிக்கடி நோக்குற் றலமரு மின்னினல் லாய்ந்துநெறி நொடிக்கடி மாற்றி யடைகுவ லென்பதி நுண்ணிடையே. (/93) இவற்றுள் இறையோ னிருட்குறி வேண்டலும் நெறியினதெளிமை கூறுதலும் தலைமகனவணாட்டணியியல் வினாதலும் பாங்கிஇறை விக்கு இறையோன் குறையறிவுறுத்தலுமாகிய நான்கும் வேண்டற்கும், பாங்கி நெறியின தருமைகூறலும் இறைமகள் இறைவனைக்குறி வரல் விலக்கலும் பாங்கி இறைவனை வரவு 120