பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ளற் குறுபுகழ்க் கோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவாய் நள்ளற் பொழுதிடை நான்பட்ட துன்பமென் னங்கையரே. (/95) - பாங்கி தலைவன் ஹீங்கெடுத்தியம்பல். (இ-ள்.) தோழி தலைவன் பொல்லாங்கை யெடுத்துக் கூறுதல். * ஆபா தவரை யடுத்தன நாமவ ரன்பொழிந்திங் கோயா துறுதவத் தோன்ஷம்சுத் தாசி னொளிர்வரையீர் பாயா வருமிருட் பானா ளிரவிடைப் பற்றவர்போன் மாயா தியற்றி மறைந்தன ரிந்த வடுக்குறியே. - (/96) தலைவன் புலர்ந்து போதல். (இாள்.) தலைவன் தான் குறிக்கப்பட்ட இடத்தி லிருந்து, தலைவி அல்ல.குறி யடைந்து வாராமையால் வருந்தித்தன்னுர்க்குப் போதல். போர்தந்த வாட்கைப்பு மான்ஷம்சுத் தாசீன் பொருந்தலர்போன் மார்தந்த கொங்கை மகிழ்நலம் வேட்டு வரவழைத்திக் கார்தந்த கங்குற் கனையிருட் சாரலிற் கைவிட்டுவெஞ் சூர்தந்த நஞ்சே யுனக்கே னொருகொம்பு சூடுதற்கே. (/97) இதுவரையும் ஒன்பதாநாள் நிகழ்ச்சி. புலர்ந்தபின்வறுங்களந் தலைவிகண்டிரங்கல். (இ-ஸ்.) ஒன்பதாநாள் இருள் புலர்ந்த பின் தலைவி வெற்றிடத்தைக்கண்டு வருந்துதல். இருள்புலர்தல்-விடிதல். கார்செய்த வண்கைப்பு மான்ஷம்சுத் தாசீன் கனகவெற்பில் யார்செய்த மாதவ மோமடி காளல தற்பகலு நீர்செய்த மாதவ மோவென்ற னாயகர் நீளணியிலொன் றேர்செய்த தும்மை யிருஞ்சுகம் யாவுமின் றெய்துறவே. (/98) தலைவி தன்றுணைவிக்குணர்த்தல். (இ-ஸ்.) தலைவி தன்றுன்பத்தைத் தன்றோழிக்குச் சொல்லுதல். முடியிருந் துண்ப தெனநினைத் தேனவர் மூட்டியவன் படியிருந் துண்ணுங் கரும்பினை யாய தகிலமெல்லாங் குடியிருந் தார்புகழ்க் கோன்ஷம்சுத் தாசின் கொழுங்கிரிவாய்த் தொடியிருந் தோங்குகை யாயினிச் சூழ்வதென் றொல்வினைக்கே. (199) 其22