பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோனே றனையதக் கோன்ஷம்சுத் தாசீன் குலக்கிரிவாய் யானேறிப் போந்தன னென்றன ராலன்ப ரேந்திழையே. (204) என்பிழைப் பன்றென்றிறைவிநோதல். (இ-ள்.) குறி பிழைத்தது என்பிழை யன்றென்று தலைவி நொந்துகூறுதல். சித்தமெ லாமவர்க் கேகுறிக் கேசெவி சேர்த்தலர்வாய்ச் சத்தமெ லாங்குறித் தேன்றவித் தேன்பைத் தமிழ்க்கணிதுர சத்தமெ லாந்தரு வோன்ஷம்சுத் தாசீ னடுக்கலிலென் யுத்தமெ லாமறி விர்வினை யோவிவையொண்ணுதலே. (205) இப்பன்னிரண்டும் அல்ல.குறியின் விரியென்க. இதுவரையும் பத்தாநாட் பகல் நிகழ்ச்சி. தாய்துஞ்சாமை. (இ-ள்.) தாய் விழித்திருத்தல். நள்ளென் றிருண்டு நடுநிசி போதர நற்றமிழ்க்குக் - கொள்ளென்றளிக்குமிக் கோன்ஷம்சுத் தாசீன் குளிர்சிலம்பிற் றெள்ளென் றெவையுஞ் செழுந்துயில் கொண்டுறற் றேர்ந்துமன்னை தள்ளென் றவைமறந் தாளிருந் தாளென்ன சஞ்சலமே: (206) நாய் துஞ்சாமை. (இ-ள்.) தாயுறங்கியபின் ஊரிலுள்ள நாயுறங்காதிருத்தல். நாய்துயி லாத சளமொழிந் தாலுமச் சார்பிருந்த பேய்துயி லாதுபெம் மான்ஷம்சுத் தாசீன் பெருஞ்சிலம்பி னாய்துயி லாதவ் விழிதுயின் றாலு நாற்றுமதன் வாய்துயி லாது வருவதெவ் வாறன்பர் மாதரசே, (207) - ஊர்துஞ்சாமை. - (இ-ள்.) நாயுறங்கினும் ஊரிலுள்ளாருறங்காதிருத்தல். ஊர் ஆகுபெயர். தோடுறங் காமலர்த் தோகைநல் லாயிறை சூழ்வறநற் கோடுறங் காமுன்றிற் கோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிசேர் காடுறங் காகருங் காருறங் காகடற் காவுறங்கா நாடுறங் காததற் கென்செய்த னோமுன்னை நாட்பழியே, (208) Í 24