பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவலர் கடுகுதல். (இ-ஸ்.) ஊர் துஞ்சியபின் நகர்காப்போர் பறை யடித்துக்கொண்டு ஊர் சுற்றிக் கடுகி வருதல். கடுகல் - விரைதல். படிப்பா லுயர்ந்தநல் லோன்ஷம்சுத் தாசீன் பனிவரையின் றொடிப்பான் மொழியியற் றோகைமின் னேயஞ்சிச் சூழ்வறத்திங் கொடிப்பான் றிசைமுற்று முற்றெழு காவல ரோங்குபறைக் கடிப்பா னதிரொலி காலனென் றாயதெங் காதிணைக்கே. நிலவு வெளிப்படுதல். (இ-ள்.) தலைவன் வருதற் கிடையூறாய் நிலாவெளிப்படுதல். தேறாத் தெளிவினென் செல்வர்வந் தேகுந் திருவருகைக் கூறா யருளுர வோன்ஷம்சுத் தாசீ னொளிர்வரையி iைறாக் கரித்தெனை நித்தலுங் காய்ந்தவிந் நீண்மதிக்கு மாறாக் களங்க மலிந்து மதியிலை மாதரசே, கூகை குழறுதல். (இ-ள்.) கூகை குழறக் கேட்ட தலைவியஞ்சிக் கூறல். வஞ்சின மோபகை யோமுனி வோவரு மங்குலிற்துன் மஞ்சின மோங்குகைம் மால்ஷம்சுத் தாசீன் வளநகர்வாய்த் துஞ்சின தோர்ந்துமென் றோகைவெங் கூகை தொடர்ந்தாச ரஞ்சின ராக வரற்றியென் னாவி யழிக்கின்றதே. கோழி குரற் காட்டுதல். (இ-ள்.) இருவர்க்குமிடையூறாய்க்கோழி கூவுதல். ஆவற் கருமருந் தன்னநம் மன்ப ாலுத்தகல மாவற் புயப்பெரு மான்ஷம்சுத் தாசீன் மலையமன்னாய் மேவற் கடையெழு யாமத்தி னஞ்சிறை விட்டடித்துச் சேவற் குரற்செயச் செய்ததென் னோமுனந் திவினையே. (209) (2/0) (2//) (2/2) இவ்வேழும் இரவுக்குறி யிடையீட்டில் வருந்தொழிற் கருமையின் விரி; இவ்வேழில் ஒவ்வொன்றுக்கும் நந்நாந்கு நாழிகையாகக் கொள்க. இரவுக்குறியிடையீடு-முற்றிற்று. 125