பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலிம்களென்னும் மேதைகளுக்கும், தமிழில் புலமை பெற்ற சான்றோர் களுக்கும் வேண்டும் போது வேண்டியன கொடுத்து ஆதரித்து வந்த பண்பாளர் மக்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகள், வழக்குகளைக் கேட்டறிந்து நல்லிணக்கமுறச் செய்வித்தும், தவறாத நீதியும் வழங்கி வந்த நீதிவான்; மழை முகிலெனவே யாவர்க்கும் இன்முகத்துடன் தயையும் தனோப காரமும் புரிந்துவந்தமையால் இந்து முஸ்லிம்களின் ஒருமித்த அன்பைப் பெற்றிருந்த பொது ஜன உபகாரர்; பள்ளிவாசலிலும் தமது பங்களாவிலும் வைத்து அன்றாடம் செய்து வந்த தர்ம காரியங்கள் அல்லாமலும், புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி வழங்கியும், அதன் புனித இரவுகளில் ஆயிரக்கணக்கான ஏழை, எளியவர்களுக்கு யாதொரு வேற்றுமையும் பாராட்டாது நல்லுணவு அளித்தும், இரவலர்களுக்குப் பொருளும் பணமும் வரையாது வழங்கியும் வந்த தர்ம சீலர்; - * தமது ஆயுளுக்குப் பின்னரும் தமது சந்ததியினரால் அறப்பணிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வர வேண்டுமென்ற நல் சாசனமுடையார்; என்றவாறெல்லாம் வள்ளல் ஷம்சுத்தாசீனவர்களின் ஈகைச் சிறப்பு போற்றப்படுகின்றது. * பண்பு நலமும் குண நலனும் அறுசீர் விருத்தம் வசைமென் மலருந் திவ்ய வசனமும் வதன வாய்ந்து தின மதி புன்ந கையுந் திகழ் தருங் கருணை நோக்கும் மனமகிழ்ந்தாத ரிப்பும் மானிலத் தோர்வியக்க ஜனத் திடை புதுமை யுள்ள தமுதாவினான கோவே. தூசணித் தவர்களையுந் தொண்டு செய் தடுத்தோரையுங் காசினி மீதொன்றாக கண்டிடுங் கருணையாள்ா மாசிலா மனமு மீகை வழுவிலா தழுமை பூண்ட சாசனமுடைய கோமான்தமுதாவரீனான கோவே. ** 'எவ்வளவு தளர்விலும் ஷம்சுத்தாசீனவர்கள் ஐவேளையுமே தவறாது

  • அருட்கவி முஹம்மது ஹனிபா புலவர், 'அநுக்ல புஞ்சம்"(1936) பாடற் றொகுதியின் கருத்துரை. r ** அநுகூல புஞ்சம் பக். 33-34.

1 +