பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரைதல் வேட்கை. அஃதாவது - இடையிடுபட்டதனாற் பதினொராநாள் தலைவி மணஞ் செய்தலை விரும்பல், அஃது அச்சம் உவர்த்தல் ஆற்றாமையென மூன்று வகைப்படும்.; அவை வருமாறு: தலைமகளைப் பாங்கி பருவரல் வினவல். (இ-ஸ். தலைவிதுன்பமுற்றிருத்தலைத் தோழிகேட்டல், வாடா மலர்முகம் வாடினை மைக்கண் வடித்தனைபைந் தோடா ரலரெதுஞ் சூடிலை யாயன்னை சொற்ற துண்டோ கோடாத கோன்மையங் கோன்ஷம்சுத் தாசீன் குளிர்சிலம்பி னோடாத மானனை யாயுரை யாயென்கொ லுற்றதுவே. (2/3) அருமறை செவிலி யறிந்தமை கூறல். (இ~ள்.) தலைவியரிய களவொழுக்கத்தைச் செவிலித்தாயறிந்தமை பாங்கிக்குக் கூறுதல். - தண்டா வளத்தன தோன்ஷம்சுத் தாசின் றடத்தனங்கே யொண்டா ரகைமதி போலுநம் மன்னை யுடற்பசப்பும் வண்டார் புனைகுழற் சோர்வுங்கட் சேப்பு மயக்குமெதிர் கண்டா ளயிர்த்தறிந் தாடொடுத் தாளிரு கட்கனையே. (2/4) - தலைமகன் வருந்தொழிற் கருமை சாற்றல். (இ-ஸ். தலைவி தலைவன் வருதற்கருமை பாங்கிக்குக் கூறல், தாயோ துயில்கிலள் ஞாளியு மூரன்ன சாற்றுபறை வாயோ வடைக்கில கூகையுங் கோழியு மானுமதித் தியோ சுடுமிவை யெல்லாந் தொலைத்தன்பர் சேர்வதெவ்வா றாயோ வெனுங்குனத் தான்ஷம்சுத் தாசி னருட்கிரிக்கே. (2/5) தலைமகனுாருக்குச் செலவொருப்படல். (இ-ஸ்.) தலைவனிருப்பிடத்துக்குப்போதற்குத் தலைவி துணிந்துபாங்கிக்குக் கூறுதல். - கூரா ரயில்விழிக் கோமள மேநந்தங் கொற்றவருர் நோா யடைந்தவர் நேர்மையெ லாங்கண்டு நீக்கமுறின் றோார் குலவரிச் சேய்ஷம்சுத் தாசின் செழுஞ்சிலம்பி லோரா துடல்பொரு ளாவியெ லாமவர்க் கொப்பிப்பமே (2/6)