பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாங்கியிறைவனைப் பழித்துரைத்தல். (இ-ள்.) தோழிதலைவனை நிந்தித்துக் கூறுதல். மறங்கா லயில்விழி மங்கைநல் லாயவர் வார்த்தையன்பிற் புறங்கா தலுமுள தன்றகன் றாரவண் போந்துமென்னோ வறங்கா தலித்தபு மான்ஷம்சுத் தாசீனருஞ்சிலம்பி - லிறங்காத் துறையி லிறங்கிய தானமக் கிவ்வினையே. (2/7) இறைவி யிறையோன்றன்னைநேர்ந்தியற்படமொழிதல். (இ-ள். பாங்கி தலைவனியலைப் பழித்தது பொறாளாய்த்தலைவி தலைவனோ டுடன்பட்டவளாயவனியலைக்கூறுதல், - அல்லும் பகலு மடுத்தடுத் தாகு மமைவிலஞர் புல்லுஞ் சுகமும் புறத்துள தாலெனிற் போற்றலர்போர் வெல்லும் பெருந்திறல் வேள்வும்சுத் தாசீன் வியன்சிலம்பிற் சொல்லுங் குறையெவை யோவன்பர் பாலினித் தோகையரே. (2/8) இதுவரையும் பதினொராநாள் நிகழ்ச்சி. கனவு நலி புரைத்தல். (இ-ள்.) தலைவன் கனவிற் கூடினனாக, விழித்தபின்பு பொய்யாய்ப்போன துன்பத்தைப் பன்னிரண்டாநாள்தலைவி பாங்கியினிடத்திற்கூறுதல். கூரா தொருதுயில் கொள்ளவு மன்யர் குறுகியென்னை வாராய் முலைதிற வாய்நெகி ழாய்கலை வாயமுதந் தாரா யெனுமுனல் லோன்ஷம்சுத் தாசீன் றமிழ்ச்சிலம்பிற் காரார் குழலணங் கேவிழித் தேனவர்க் காண்கிலனே. (2/9) கவினழி புரைத்தல். (இ-ஸ்.) விகாரத்தாற்றலைவிதன்னலனழிந்ததைப் பாங்கியுடன் கூறுதல். காட்டுக் கெறித்ததி லாவென வென்னிரு கைக்கயச்செங் கோட்டுத் தனநல மன்பர்கைப் பேழையிற் கூடலின்றிப் பாட்டுக் கினியபெம் மான்ஷம்சுத் தாசீன் பனிவரைவாய்ச் சோட்டுக் கருங்கொடி சூழ்நுத லாய்நிதஞ் சோர்கின்றதே. (220) தன்றுயர் தலைவற் குணர்த்தல் வேண்டல். (இ-ஸ்.) தலைவி தன்றுன்பத்தைத் தலைவனுக்கு அறிவிக்க வேண்டுமென்று பாங்கியுடன் கூறுதல், பிடியோ டனநடைப் பெண்ணணங் சேமயல் பெற்றதல்லா 127