பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லடியோ டெவரை யடைந்தன மன்பர்க் கரசர்மணி முடியோ டிறைஞ்சிசை வேள்வடிம்சுத் தாசீன் முதிர்கிரிவாய்த் தொடியோ டறுவை தொலைந்தன ளென்னமுன் சொல்லுதற்கே. (22/) துன்புறற் பாங்கி சொல்லெனச் சொல்லல். (இ-ள்.) யான் துயரடைதலைத் தலைவற்கு நீ சென்று சொல்லென்று தலைவி கூறியதற்குத் தலைவியை நோக்கிப் பாங்கிகூறுதல். பிணைதந்த வன்பிரு பேர்க்கிடை மற்றையர் பேசலென்னோ கணைதந்த வேல்விழிக் கன்னிநல் லாய்புவிக் காவலர்கட் கணைதந்த செம்பதத் தான்ஷம்சுத் தாசி னருங்கிரிமே லினைதந்த நின்மய னியே சொலச்சுக மெய்துறுமே. - (222) அலர் பார்த்துற்ற வச்சக்கிளவி, (இ-ள்.) ஊரிலுள்ளார்சொல்லும் பழிச்சொல்லைக்கருதி அதனாலுற்ற பயத்தாற் றலைவி கூறுஞ்சொல். - மலர்க்குள் ளொளிரு மதிமுகத் திரைம் மலர்க்கனைவில் வலர்க்குள் ளுடைந்து மறுகேன் மறகநன் மண்டலிகர் பலர்க்குள் ளுயர்ந்தபு மான்ஷம்சுத் தாசீன் பவளவல்லி யலர்க்குள் எாலரா வலர்தந்த திந்த வரும்பதியே. (223) ஆறு பார்த்துற்ற வச்சக்கிளவி. (இ-ள்.) வழியைப்பார்த்து அதனாலடைந்த பயத்தாற் றலைவி பாங்கியை நோக்கிக் கூறுஞ் சொல். பார்த்தல்-கருதல். பேரா ரமுதப் பிழம்பே யெளியேன் பெறற்குறுமோ காரார் கயந்துவைத் தன்பர்செந் நீர்படி கான்மலர்பூந் தாரார் துணைப்புயத் தான்ஷம்சுத் தாசின் றடத்திலென்கண் னிராற் கழுவியைம் பாலாற் றுடைக்குமந் நீர்மையின்றே. (224) காம மிக்க கழிபடர் கிளவி. - (இ- ள்.) தலைவி ஆசைமிகுந்து சிறப்பச் சிந்தித்துச் சொல்லுஞ்சொல்; இக்கிளவிக்குக் கடல், கானல், விலங்கு, புள்முதலியவற்றை விளித்துத் தலைவி யிரங்கிக் கூறுதன் மரபு. எறியு மலைகட லேகூற வேகுரு கேயினமுஞ் செறியும் பெருந்தவத் தோன்ஷம்சுத் தாசின் செழுஞ்சிலம்பிற் பறியுந் தொடியும் படருந் துணியும் பசப்புமையல் வெறியுஞ் சிறையும் விளைவு முனர்ந்திலர் மெய்யன்பரே. (225) 128