பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னுட்கையாறெய்திடு கிளவி. (இ-ன்.) தலைவி தன்னிடத்துத் துன்பத்தைப் பிறிதொன்றன் மேலிட்டுச் சொல்லுதல். மஞ்சங் கடுத்தனை மையற் பெருத்தனை மாமுலையும் விஞ்சப் பொலிந்தனை மெய்யும் வெளுத்தினை வேற்றரசர் துஞ்சப் பொருபடை வேள்வும்சுத் தாசின் சுடர்க்கிரிகண் டஞ்சும் பிறையே யகன்றதுண் டோநிற்கு மன்பிறையே. (226) நெறி விலக்குதல். (இ-ஸ்.) தலைவி தலைவன்வரும்வழியை விலக்கெனப் பாங்கியொடு கூறுதல். பேரா தரப்பெரு மான்ஷம்சுத் தாசீன் பிறங்கலென வேரா ரிளமுலை யேகுறள் பேயோ டிருசுடருந் தேரா தயிர்க்குஞ் சிறுநெறிச் சாரற் செறியிருளில் வாரா திருக்க வழுத்துதி யன்பர்க்கென் வந்தனமே. (227) குறி விலக்குவித்தல். (இ-ஸ். தலைவி தலைவன்வரு மிரவுக்குறியை விலக்கெனப் பாங்கியொடு கூறுதல். நெறிக்குங் கருங்குழ லாய்புனங் காவ ணிகழ்த்தினளெல் லெறிக்கும் பகலவ னேய்வதல் லாலன்பர்க் கேதிலரைத் தறிக்குங் கடுத்தலை வேள்வடிம்சுத் தாசீன் தடத்தகத்தற் குறிக்குங் குறிக்குட் குறுகலென் றோதலர்க் கோதைமின்னே. (228) வெறி விலக்குவித்தல். (இ-ள்.) தாய்தந்தையர் வெறியாடுதலை விலக்கும்படி பாங்கிக்குத் தலைவி கூறுதல். வெறியாடுதல் ஆடறுத்துப் பலியிடுதல். சேய்கொண்ட பூம்பதத் தோன்ஷம்சுத் தாசின் சிலம்பிலெம்மைப் பேய்கொண்ட தென்ன வறிவழிந் தன்பருட் பெய்யுமைய னோய்கொண்ட தோர்கில ளாய்வெறி யாட னுடங்குமிடைத் தாய்கொண்ட வாவணங் கேதவிர்ப் பாய்வருந் தண்புகழே. (229) பிற விலக்குவித்தல். (இ-ள். தலைவியிதரவவைத்தலைவற்குச் சொல்லி அவர் வரவைவிலக்கெனப் பாங்கிக்குக் கூறுதல். சரச குணசுக மால்ஷம்சுத் தாசின் றணிச்சிலம்பி வரச மதகரி பட்டவர்க் கன்றி யணிமறுகின் 129