பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முரச மதிர்தொனி யார்மணத் தென்ன முடுகிமலர்ப் பிரச நறுங்குழ லாய்விலக் காயவர்ப் பிற்படவே. (230) குரவரை வரைவெதிர் கொள்ளுவித்தல். (இ-ள். நந்தலைவர் விட்ட பெரியோர் மணம்பேசிவர அவரை நம்மவ ரெதிர்கொண்டழைக்குமாறு செய்யெனத் தலைவி பாங்கி யொடு கூறுதல். வான்கொண்ட மெய்ப்புகழ் மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி னான்கொண்ட கற்பழி யாதன்னை யாதியர் நாடுமன்பர் தான்கொண்ட மன்றலந் தூதெதிர் கொள்ளத் தழைத்தசுனைத் தேன்கொண்ட காவியஞ் சேல்விழி யாய்சொல் செழுங்கிளைக்கே. (23/) இவற்றுள்-அருமறை செவிலியறிந்தமை கூறலுந்தலைமகன்வருந் தொழிற்கருமை சாற்றலும் அலர்பார்த்துற்ற அச்சக்கிளவியும் ஆறு பார்த்துற்ற அச்சக்கிளவியும் நெறி விலக்குவித்தலும் குறி விலக்குவித்தலும் வெறி விலக்குவித்தலும் பிற விலக்குவித்தலும் குரவரை வரைவெதிர் கொள்ளு வித்தலுமாகிய ஒன்பதும் அச்சத்திற்கும், தலைமகனுர்க்குச் செலவொருப் படுதலும் பாங்கியிறைவனைப் பழித்தலும் தலைவி யிறையோன்றன்னை நேர்ந்தியற்பட மொழிதலுமாகிய மூன்றும் உவர்த்தற்கும், பாங்கியருவரல் வினவலும் கனவு நலிபுரைத்தலும் கவினழிபுரைத்தலும் தன்றுயர்தலைவற் குணர்த்தல் வேண்டலும்துன்புறல் பாங்கிசொல்லெனச்சொல்லலும் காம மிக்க கழிபடர் கிளவியும் தன்னுட்கையா றெய்திடுகிளவியுமாகிய ஏழும் ஆற்றாமைக்கு முரியன. பருவரல் வினவிய பாங்கியென்பதற்குவினவலு மொரு துறையாக்கலாற் சூத்திரத்திற் கூறிய பதினெட்டுக்கு மேற் பத்தொன்பதாயிற்று. இதுவரையும் பன்னிரண்டாநாள் நிகழ்ச்சி, வரைதல் வேட்கை-முற்றிற்று. வரைவு கடாதல் அஃதாவது - பாங்கி தலைவனுடன் வரைவுகடாதல். வரைவு கடாதல் - மணம் வினாவுதல்; அது பொய்த்தல் மறுத்தல் கழறல் மெய்த்தலென நான்கு வகைப்படும்; அவை வருமாறு: வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல். (இ-ஸ்.) முன் வரைதல் வேட்கையில் தலைவி அருமறை செவிலியறிந்தமை கூறியவதனைத் தோழி தன்னைச் செவிலி வினவியதாகவும் அதற்குத் தான் மறைத்துக் கூறியதாகவுந் தலைவற்குக் கூறுதல், இக்கிளவிமுதல், பின்வருங் கவினழிபுரைத்த லீறாகக் கூறிய கிளவிகள்பலவற்றுள்ளும் குறிப்பினானும் வெளிப்படையானும் வரைவுகடாவிய வாறு கண்டுகொள்க. 130