பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளையோ டுலகளிப் போன்ஷம்சுத் தாசீன் கிளர்சிலம்ப முளையோ டிகல்புயத் தன்னையு மென்னை முடுகியிவள் வளையோ டறுவை வழங்கிய தேதென மங்குலெல்லாங் களையோ டிசைவகை கற்றன ளென்னக் கரந்தனனே. (232) அலரறிவுறுத்தல். (இ-ன்.) ஊரில் தலைவியைத் துாற்றும் அலர்விரிந்ததென்று தலைவனுக்குப் பாங்கி யறிவுறுத்தல், அலர் பழிமொழி. அறிவுறுத்தல் அறியும்படி கூறுதல். ஆர்வா யடைப்பினு மூர்வா யடைப்ப தரிதெனநன் கோர்வா யிறைவா யுனதிரு கையல ருற்றவிந்தப் பார்வா யலரெனப் பைங்கொடி சோரப் படர்ந்தமுடிச் சார்வா யலர்ந்ததெம் மான்ஷம்சுத் தாசீன் றடத்தக்கதே. (233) தாயறிவுறுத்தல். (இ-ஸ்.) தலைவியின் களவைத் தாயறிந்தாளென்று தலைவனுக்குத் தோழி யறிவுறுத்தல். காமா நலஞ்சுடக் காய்ந்தொளி மாழ்கிக் கரிந்தமுலைக் காமா வலிபசப் பாதிகண் டேங்கி யகிலமெல்லாந் தாமா வருபெரு மான்ஷம்சுத் தாசீன் றடஞ்சிலம்போ யேமாந் தனையிவை யென்கொலென் றாளன்னை யென்னையுமே.(234) வெறியச்சுறுத்தல். (இ-ஸ். அன்னை வெறியாடுதல் செய்ய நினைத்தாளென்று தலைவனுக்குப் பயமுறுத்திப் பாங்கி கூறுதல். அடலுற்ற வண்ணல்பி ரான்ஷம்சுத் தாசீ னருஞ்சிலம்பின் மிடலுற்ற வேலன்ப. நீயவி யாமயல் வெவ்வழன்முண் டுடலுற்ற தோர்கில ளாயுலை வாயயர்ந் துள்ளுடைந்து கடலுற்ற கண்ணியென் றாய்வெறி யாடற் கருதினளே. (235) பிறர்வரை வுணர்த்தல். (இ-ள்.) பிறர் மணங்குறித்து வந்ததைத் தலைவற்குப் பாங்கி கூறுதல். சங்கைக் குரியபு மான்ஷம்சுத் தாசீன் றடத்துறுவேற் செங்கைக் கொளிரர் சேமுகத் திங்களுஞ் சேல்விழியுங் கொங்கைக் குடமுங் குறுநகை யுங்குழற் கொண்டலுங்கண் டெங்கைக் குருகா தவரெவ ரேயில் விருநிலத்தே. (236) Í 31