பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரைவெதிருணர்த்தல். (இ-ள். பாங்கிதலைவனை நோக்கிcமணங்குறித்துத் தூதனுப்பினால் தலைவி சுற்றத்தாரெதிர்கொண்டு வருவரெனக்கூறுதல். பொய்க்கலை பாப்பொரு ளேநன்ஷம்சுத் தாசீன் பொதியவெற்பின், மெய்க்கலை கண்டவர் மேவினன் பாவவர் மேயவரு கைக்கலை யாதெதிர் வாரெமர் வெண்ணெய் காத்திருத்தி நெய்க்கலை வாரென நீயலை யேலல்லி னிள்குறியே. (237) வரையுநாளுணர்த்தல். (இ-ள்.) தலைவனுக்குப்பாங்கி மணஞ்செய்யுநாளையறிவித்தல். மணிமா எளிகைத்திரு மால்ஷம்சுத் தாசின் மலையவெற்பிற் கணிமா மலருங் கலைமதி வட்டமுங் கண்டதன்றி யணிமா வருபெரு மாவலர் வாயமு தாயிழையை ந்ணிமா மணம்பெறக் காலமு நேரமு நாளுமின்ற்ே. (238) அறிவறிவுறுத்தல். (இ-ள்.) பாங்கி தலைமகளறிவைத்தலைவனுக் கறியக் கூறுதல். பூமக ணாதனெம் மான்ஷம்சுத் தாசீன் புனிதவெற்பி னாமக ணாமக ளென்னநன் னிதி நயந்தெவர்க்குங் கோமக ணின்பழி யன்னையி னென்னையுங் கொண்டொழித்துக் காமக ளாயின என்பமற் றேது கழறுவதே. (239) குறிபெயர்த்திடுதல். (இ-ன்.) பாங்கி யிக்குறி யியல்பல்ல, வேறோர் குறியிடை வருகவென்று தலைவனுக்குக் கூறுதல். - மாணாப் பொலிபுய மால்ஷம்சுத் தாசீன் மணிவரைவாய்ப் பேணாப் பெருந்தவத் தண்ணனின் சார்வைப் பெரிதுமுன்னி விணாய்க் கலங்குமென் மெல்லிதல் லாளன்னை மேவியங்கண் காணாக் குறிபெயர்த் தாடுக நீயுமுன் கன்னியுர்ே. (240) இதுவரையும் பதின்மூன்றாம்நாள் நிகழ்ச்சி பகல் ഖുഖiഖങ്ങ யிரவு வருகென்றல். (இ-ள்.) வெளி. 132