பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லுக்கு வல்லவெற் பாவிண்மண் ணாகி விளங்கினுந்தன் சொல்லுக்கு வல்லபு மான்ஷம்சுத் தாசீன் சுடர்க்கிரிமே வல்லுக்குப் பூப்பதல் லாலளி யார வனுதினமு மெல்லுக்குப் பூப்பதுண் டோவிவ ளல்லி யிருமலரே. (24/) இரவு வருவானைப் பகல் வருகென்றல். (இ-ஸ். வெளி. நஞ்ச முமிழ்படை வேலோய் ககனொடு நானிலமு மஞ்ச லெனப்புரப் போன்ஷம்சுத் தாசி னருட்கிரிமேல் விஞ்ச வரும்பகற் கல்லா லிரவிடை மேயவிவள் கஞ்ச மலர்தரு மோவரு மோசுகங் காண்பதற்கே. (242) இதுவரையும் பதினான்காநாள் நிகழ்ச்சி. பகலினு மிரவினும் பயின்று வருகென்றல். (இ-ள்.) பகற்காலத்தும் இராக்காலத்தும் நெருங்கி வருகவெனப் பாங்கி தலைவற்குணர்த்தல். பயிலல் - நெருங்கல். - புகலோ டொளிசெய் புயத்தர சேதினம் போற்றலர்போ 'ரிகலோ டிசையறுப் போன்ஷம்சுத் தாசீனருஞ்சிலம்பி லகலோ டணிமுலை யாற்றரி தான்மய லாற்றியுய்யப் பகலோ டிரவும் பயின்றுறு வாயிந்தப் பைந்நிழற்கே. (243) பகலினு மிரவினு மகலிவ ணென்றல். (இ-ள்.) பகற்காலத்து மிராக்காலத்துநீயில்விடத்துவராதேயென்று தலைவனைப் பாங்கி விலக்குதல். சொல்லுந் துயிலிலை யென்மதிக் குன்னலர் சூழ்மதிலைக் கல்லுங் கடகரிக் கோன்ஷம்சுத் தாசீன் கனகவெற்ப கொல்லுங் குறளோடு கூறு மலருங் குடிகொளலா லல்லும் பகலு மகலிவ ணுற்ற வருங்குறியே. (244) உரவோனாடு மூருங்குலனு மரபும் புகழும் வாய்மையுங் கூறல், (இ- ள்.) பாங்கி தலைவனை நோக்கி நாடு முதலியவற்றாற் சிறந்த நீ மணஞ்செய்யாது வந்து போவது தகுதியன்றெனக் கூறுதல். நீடுஞ் சிலைவடி வேலண்ண லேமண நேர்ந்திலையேற் சூடும் பெரும்புகழ் மால்ஷம்சுத் தாசீன் சுடர் தடத்துன் 133