பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னாடும் பதியுங் குலனுங் குடியுமெய்ந் நற்புகழுங் கோடும் பிறர்குறை யோவருங் கைதவங் கூடிடுமே. (245) ஆறுபார்த்துற்றவச்சங்கூறல், - (இ~ள்.) வரும்வழியைக் கருதி அவ்வழியிற் றிரிதரும் விலங்காற் றோன்றும் பயத்தைத் தலைவனுக்குத் தோழி கூறுதல், கொல்லுங் கரடி கொடுவரி சீயங் கொதித்தெழுந்து செல்லுஞ் சிறுநெறிச் சாரலன் பாவினிச் சேரலென்றுஞ் சொல்லும் பெருஞ்சுக வேள்2ைம்சுத் தாசீன் சுடர்க்கிரிமே லல்லும் பொருங்குழ லாய்முத்த வெண்ணகைக் கன்புவைத்தே. (246) ஆற்றாத்தன்மையாற்றக்கூறல். - (இ- ள்.) தலைவியின் ஆற்றாத்தன்மையை யாற்றுதல் செய்யத்தோழி தலைவனுக்குக் கூறுதல். - மயக்குந் தெளியும் வடிக்கு மழைக்கண் மருண்டெழுந்து - தியங்கு முயிர்க்குஞ் சினக்கு முலைமுகஞ் சேரவுன்னித் தயங்கு மரசர்பி ரான்ஷம்சுத் தாசீன் றடஞ்சிலம்பிற் கயங்கு மயில்விழிக் கன்பநின் சோகங் கடிந்தருளே. (247) காவன் மிகவுரைத்தல். (இ-ள்.) குறியிடத்து நீ வருவதற்கும் அவள்வருவதற்கும் இடையூறாகிய காவல் மிகவாயினதென்று தோழிதலைவனுக்குக் கூறுதல். மண்காக்கும் பூபர்பி ரான்ஷம்சுத் தாசீன் மலையவெற்பிற் கண்காக்கு மெம்மிமை போலிரு காலுங் கருத்தமைத்திப் பெண்காக்கு மன்னைவெங் காவலர் கைப்பறை பெய்யுமுகில் விண்காக்குஞ் செல்லென வேமுழங் காதிற்கும் வேலண்ணலே.(248) - காம மிகவுரைத்தல். - (இ-ஸ்.) தலைவி வேட்கை மிகவாயினதென்று தோழி தலைவனுக்குக் கூறுதல். சினைத்தார் படர்புயச் செம்மலொன் னார்தரு சேனைமுற்றுங் கனைத்தா ருயிர்கொளு மால்ஷம்சுத் தாசீன் கனகவெற்பிற் றனைத்தா ைைடந்தார் தமைச்சுட லன்றித் தரணிமிசை நினைத்தன்ற் சுடுங்கொனின் காமா நலமொத்தந் நீணெடுப்பே. (249) 134