பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவு நலி புரைத்தல். (இ-ள்.) தலைவிக்குக் கனவினால் வந்த துன்பத்தைப் பாங்கி தலைவனுக்குக் கூறுதல். - முலையோ நெருடி யிதழமு துண்டு முழுதுமிடைக் கலையோ நெகிழ்க்கக் கனவொன்று கண்டவக் காரிகைமா மலையோ டிகல்புய மால்ஷம்சுத் தாசின் மகிழ்சிலம்ப வுலையோ டுறுமெழு காகினள் வேறென்கொ லோ துவதே. (250) கவினழிபுரைத்தல். (இ-ள்.) தலைவி அழகழிந்திருத்தவைத் தோழி தலைவனுக்குக் கூறுதல். பொன்வண்ண மெவவண்ண மவ்வண்ண மேனி புலர்ந்துதனத் தின்வண்ணம் பூரித் திருஞ்சுணங் கேற்றங் கிறைபுனற்கண் டன்வண்ணஞ் சேப்பச் சலித்தன ளன்ப தரணிமுற்றும் பன்வண்ண மெய்ப்புகழ் வேள்வும்சுத் தாசீன் பனிவரைக்குமே. (25) இவற்றுள்-வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல் முதலாகப் பிறர் வரைவுணர்த்த லீறாகக் கூறியவைந்தும் பொய்த்தற்கும்,குறி பெயர்த் திடுதலும் பகல் வருவானையிரவு வருகென்றல் முதலிய நான்கும் மறுத்தற்கும், உரவோன் நாடு மூருங் குலனு மரபும் புகழும் வாய்மையுங்கூறலொன்றுங்கழறற்கும், வரைவெதிர்வுணர்த்தல் முதலாகிய ஏனைய ஒன்பதும் எய்ததற்குமுரியன இவை யெல்லாங் குறிப்பினானும் வெளிப்படையானும் வரைவுகடாவியவாறுணர்க. வரைவுகடாதன்-முற்றிற்று. ஒருவழித்தணத்தல். அஃதாவது-மேற்கூறிய பாங்கியொடு வரைதற்குடன்பட்ட தலை வன் தன்னுார்க்கொருவழி போய்வருகிறேனென்றுபோதல்.அது செலவறி வுறுத்தல் செலவுடன் படாமை செலவுடன்படுத்தல் செலவுடன் படுதல் சென்றுழிக் கலங்கல் தேற்றியாற்றுவித்தல் வந்துழி நொந்துரைத்தல் என எழுவகைப்படும்; அவை வருமாறு; தன்பதிக்ககற்சி தலைவன் சாற்றல். • (இ-ள்.) தலைவன்தன்னுர்க்குப்போய்வருதலைப்பாங்கிக்குக் கூறுதல். போற்றும் புணர்முலைப் பூவைநல் லாய்நந்தம் பொன்னகர்போந் தாற்றுங் கருமஞ் சிலவுள. வாலங் கடைந்தடைவல் 135