பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறையில்லத்தில் தினமும் நடைபெறும் கூட்டுத் தொழுகைகளில் கலந்து கொண்டு தொழுவார். நள்ளிரவுத் தொழுகையையும் தவறாது தொழுது வந்தார். நபியவர்களின் சன்மார்க்கமாம் அத்வைதக் கொள்கையை யுள்ளத்தினுட் கொண்டு, தமது ஞானாசிரியர் அருளிய திருப்பாடல்களை உருக்கமாய் பாடி, மனமடங்கி நிட்டையிலொடுங்குவார். ஆலீம்களென்னும் மேதைகளைத் தம் அருகிருத்தித் தக்க அறிவுரைகளை கேட்டுப் பெறுவார். தாம் திரட்டிய திரவியங்களால் அன்னதானம், பானதானம், சொர்ணதானம், வஸ்திர தானம், பூதானம் முதலான அறங்களைக் கைக்கொண்டார். மன்னரும் அரசப் பிரதிநிதிகளும் பேட்டியளித்துச் சிறப்புச் செய்யும் நன்னிலையடைந்து,அரசினரின்தங்கப்பதக்கமும் பஹதூர்ப்பட்டமும்கிடைக்கப் பெற்றார். இல்லறத் துறையில் நல்லறம் நடத்தி தமக்கிசைந்த இல்லாளுடனும் புத்திர பெளத்திர செல்வாக்குடனே செல்வர்க் கழகாஞ் செழுங்கிளை தாங்கிச் சுற்றமும் தழுவி செல் விருந்தோம்பி வரு விருந்து வைகலு மெதிர்பார்த்து நல்லுனுட்டி உபசரித்துப் போற்றுவார். பெரும்பாலும் பள்ளிவாசலையே தமதிருப்பிடமாக வைத்து, வந்தவர்களை ஆதரித்து, ஏழை இரப்பாளிகள் எவ்வளவு தொந்தரவு செய்திடினும் கடிந்து நோக்காது, சிரித்த முகத்துடன் இனித்த வார்த்தைகள் சொல்லி, தன்னாலியன்றதைக் கொடுத்தனுப்புவார். ஆலயப் பணிவிடைகளைத் தாமே செய்வார். பக்கங்களிலுள்ள அசுத்தங்களையும் தம் கைக்கொண்டே பரிசுத்தப் படுத்துவார். 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல்" என்பதற்கிணங்க, தமக்குத் தீங்கு செய்த எவர்க்கும் அவர் நாணும்படி நன்னயம் செய்வதே இவரது பிறவிக் குணமாகவிருந்தது. ஒரு போது தமக்குந், தமதருமைக் குமாரர்களுக்கும் குடிப்பொன்றில் நஞ்சிட்டுக்கொடுத்த கொடிய்னைக்கைப்பிடியாகக் கண்டு கொண்ட பின்னரும் கடிந்து கொள்ளாமலும் மேலும் மற்றெவராலும் அவனுக்குத்தீங்குநேரிடாமலும்பாதுகாத்துப்பின்னும்பதறிநிற்குமப்பாதகனைதேன் கசியும்இதமொழிகளால்பதப்படுத்திப்புத்திகூறிப்பொருள்கொடுத்துப்போகவிட்டார் எனின் இவரது ஒப்பிலாக் குணச்சிறப்பினை யென்னென்றியம்புவோம்! "பொறுத்தார்க்கும் பெரும் பேறுடையார்க்குமேயன்றி இவ்வித சிலாக்கிய குணம் வாய்க்காதென நந்திருமறையே திரைமறைவின்றியறைகின்றதன்றோ!' .

  • மேலப்பாளையம் எங் முஸ்லிம் சொசைட்டியார் சமர்ப்பித்த அனுதாபப் பத்திரம்" (6-11-1936)

12