பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூற்றுங் கொடியுங்கொள் வேல்ஷம்சுத் தாசின் குலக்கிரிவாய்த் - தேற்றுங் கடமை நினக்கல் தில்லையென்சேல்விழிக்கே. (252) பாங்கி விலக்கல். (இ-ள். தலைவன் பிரிதலைப்பாங்கி விலக்குதல். - நீங்குங் கடுஞ்சொன் னிகழ்த்தினெம் மான்செவி நேருமுன்னுள் னேங்கும் விடுமுயி ரென்செய்கு வேனிருந் தேழுலகுந் தாங்கும் பெரும்புயத் தான்ஷம்சுத் தாசீன் றடஞ்சிலம்பி லோங்குஞ் சிலைவல வாவொழி வாயுரை யூர்புகலே. (253) தலைவனிங்கல் வேண்டல். (இ-ஸ்) தலைவன்பாங்கியை யுடன்படுத்தி நீங்கற்பொருட்டு வேண்டிக்கூறுதல். ஏகமென் றோரெம் மிருவோ ருயிர்க்கு மிசைந்தபெருஞ் ச்ோகமெள் ளேனுமெள் ளேன்வரு வேனுடன் றுன்னலர்தம் மாகமென் பேய்க்களிப் போன்ஷம்சுத் தாசி னருஞ்சிலம்பிற் போகமென் றோளனங் கேவிடை வேண்டும் புகன்றருளே. (254) தலைவனைப் பாங்கி விடுத்தல். (இ-ள்.) பாங்கி தலைவனையூர்க்குப் போய்வருகவென விடுத்தல். வள்ளத் திருவாய் மலரமு தெம்மனை வாழினுமுன் னுள்ளத் திருத்தி யுடன்வரல் வேண்டுமிங் கொன்னலர்தோள் விள்ளத் துணித்தவெம் மான்ஷம்சுத் தாசீன் வியன்சிலம்பி லள்ளத் தகுமரு ளோபயர்ந் தாலுண் டரும்பழியே (255) - பாங்கி தலைவிக்கவன் செலவுணர்த்தல், (இன்.) தலைவிக்குப் பாங்கி தலைவன் பிரிவைச் சொல்லுதல். தன்னா ருயிரென்கை தந்தகன் றார்சில சாதித்தற்கூர் நின்னா ருயிரனை யார்தரி யாரெதிர் நேரலர்முன் மன்னா யுயருமெம் மான்ஷம்சுத் தாசின் மலையவெற்பிற் பொன்னா ரணியிழை யாய்புல ராயின்று போதுவரே. (256) தலைவி.நெஞ்சொடு புலத்தல். (இஸ்.) தலைவி மனத்தெள்டு வருந்திக் கூறுதல். மறவா வரமளித் தெற்பிரி யேனெனு மன்னரின்று துறவா விருந்து துயரளித் தாரிது சூழினெஞ்சே 136