பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவன் பாங்கியோடு நொந்து வினாதல். (இ-ள்.) எவ்வண்ணந் ఉణమవాణాu யாற்றியிருந்தாயென்று தலைவன் றோழியோடு வருந்திக் கேட்டல். - - பொல்லா மதன்கனைப் பூவலர் வாரி பொருமொலிவிண் செல்லா வருமதித் தீசிறு காற்குயிற் செய்யதிர்ச்சி யெல்லா மறிந்தெதிர்த் தோபொறுத் தோவிருந் தீருரையீர் - பல்லா யிரம்புக ழோன்ஷம்சுத் தாசீன் பனிவரைக்கே. (262) பாங்கி யாற்றுவித்திருந்த வருமை சாற்றல். (இ-ள்) வெளி நின்வாய் மொழிமற வாதரு ளோய்மய னிள்கடலாழ் பொன்வாய்த் துயரம் புரந்தன னாற்றமைப் போற்றலர்தம் புன்வாய் கிழிக்குமெம்'மான்ஷம்சுத் தாசீன் பொதியமலை தன்வா யடித்திரு கைநொந்த வாறது சாற்றுதற்கே. (263) இவற்றுள் - தன்பதிக்ககற்சி தலைவன் சாற்றலும் பாங்கி தலை விக்கவன் செலவுணர்த்தலுமாகிய இரண்டுஞ் செலவறிவுறுத்தற்கும், தலைமகனைப் பாங்கி விலக்கலொன்றுஞ் செலவுடன்படாமைக்கும், நீங்கல் வேண்டலொன்றுஞ் செலவுடன்படுத்தற்கும், பாங்கி விடுத்தலொன்றுஞ் செலவுடன்படுதற்கும், தலைமகள் நெஞ்சோடு புலத்தலும் காமமிக்க கழி படர்கிளவியுமாகிய இரண்டுஞ் சென்று.ழிக்கலங்கற்கும், தலைமகளை யாற் றுவித்தலும் தலைமகன் வந்தமை தலைமகட் குணர்த்தலுமாகிய இரண்டுந் தேற்றி யாற்றுவித்தற்கும், பாங்கி வந்தோன் றன்னொடு நொந்துவினாதல் முதல் மூன்றும் வந்துழி நொந்துரைத்தற்கு முரியன. ஒருவழித்தனத்தன்முற்றிற்று. ഖഖ്വിഖ്-ഖഴ്ച பொருள்வயிற்பிரிதல். அஃதாவது விவாகத்தை யிடையிலே நிச்சயித்து விவாகத்துக்கு வேண்டும் பொருள் நிமித்தமாகத் தலைவன் பிரிதல், அது-பிரிவறிவுறுத்தல் பிரிவுடன்படாமை பிரிவுடன்படுத்தல் பிரிவுடன்படுதல் பிரிவுழிக் கலங்கல் வன்புறை வன்பொறை வருவழிக்கலங்கல் வந்துழி மகிழ்ச்சி யென வொன்பது வகைப்படும்; அவை வருமாறு: 138