பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- என்பொருட் பிரிவுணர்த்தேந்திழைக் கென்றல். (இ-ள்.) விவாகத்துக்காகப் பொருள் கொண்டுவருதற்குப் பிரியும் என்னுடைய பிரிவைத் தலைவிக்குச் சொல்லென்று தலைவன் பாங்கிக்குக் கூறுதல். பொருளே யறஞ்சுகம் பூக்குந் தருவது போந்தடைந்து தெருளே தரவிவண் சேருவ லென்னவெஞ் சேரலர்முன் மருளே தரப்பொரு மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி னிருளே வெருள்குழ லாயிசை யாயந்த வேந்திழைக்கே. (264) நீன்பொருட்பிரிவுரை நீயவட்கென்றல். (இ-ள்.) வெளி. பொன்னாசை தாங்கிப் புறஞ்சொல் நீசொலும் புத்துரைகொண் டென்னாசை மங்கைக் கியம்பரி தாலுல கெண்டிசையுந் தன்னாசைக் கோல்கொடுத் தோன்ஷம்சுத் தாசீன் றடஞ்சிலம்ப நின்னாசை நேர்வர நீயே யுரையற னிள்குழற்கே. (265) நீடேனென்றவ னிங்கல். (இ-ள்.) தலைவன் நீட்டித்திராது விரைந்து வருவேனென்று பாங்கியோடு கூறி நீங்குதல். நீட்டித்தல் காலந்தாழ்த்தல். ஒங்குங் கொடுஞ்சுர முற்றனங் கேயுவப் போடிருகை தாங்கும் பொருடாச் சார்தரு வேல்ைலிற் றாழ்குழற்றான் விங்கும் பெரும்புகழ் வேள்வடிம்சுத் தாசீன் வியன்கிரிக்கு ளேங்கும் படிதரி யேன்றரித் தாற்பழி யென்றனக்கே. (266) இதுவரையும் பதினேழாநாள் நிகழ்ச்சி பாங்கி தலைவிக்கவன்செல வுணர்த்தல். (இ-ள்.) பொருள்வயிற் பிரியுந் தலைவன் செல்லுதலைப் பாங்கி தலைவிக்குக் கூறுதல். விலையளித் துன்முலை மெய்ம்மணங் காண விரையுமவர்க் கிலையளித் தண்ணென் றினையலி ராரென்று மேய்ந்தபன்னூற் கலையளித் தாளுமெம் மான்ஷம்சுத் தாசீன் கனகவெற்பி னிலையளித் தோங்குகொங் காய்வரு வாரிது நிச்சயமே. (267) பூங்குழை யிரங்கல். (இ-ள்.) தலைவி வருந்தல். 139