பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள்விடுத் தான்கணை மெய்பசப் பேற விதிர்க்குமுலைக் கோள்விடுத் தாருயிர் கொள்ளைகொள் வானினிக் கூர்ந்துளத்திந் நாள்விடுத் தாரகன் றாரென்செய் வேணண்பர் நாடுமன்பர்க் காள்விடுத் தேயருள் வோன்ஷம்சுத் தாசி னருங்கிரிக்கே. (268) பாங்கி கொடுஞ்சொற் சொல்லல். - (இ-ள்.) இவ்வாறு நீ யிரங்குவ தென்னென்று தோழி தலைவியை நோக்கிக் கொடிய சொல்லைச்சொல்லுதல். சார்ந்தார் பிரிவர் பிரிந்தவர் சார்வர் சகசமிதென் றோர்ந்தாற் றுயருனக் குண்டுகொ லோவன்ப ரோவிலிப்பார் தேர்ந்தா ளதிபதி மால்ஷம்சுத் தாசீன் சிலம்பனையாய் நேர்ந்தார் நிதிவரை வெண்ணியன் றோவின்று நீங்கியதே. (269) தலைவி கொடுஞ்சொற் சொல்லல். (இ-ள்.) மேற்கூறியபாங்கியை மனத்தினானொந்துதலைவி கூறல். கல்லுங் கரடுங் கலந்தவெங் கானிற் கருதுமன்பர் செல்லுஞ் செயலுமென் சிந்தைத் தியக்குந் தெரிந்துமென்னோ புல்லும் பெருந்தவத் தோன்ஷம்சுத் தாசீன் பொதியவெற்பிற் சொல்லுந் தரமிது நன்றுநன் றாலென்றன்றுமொழியே (270) வருகுவர் மீண்டெனப் பாங்கி வலித்தல். (இ-ள்.) பாங்கிதலைவர் திரும்பி வருவரென்று கூறுதல். வலித்தல்-வற்புறுத்திக் கூறுதல். தெள்ளுஞ் செழும்புகழ்ச் சேய்ஷம்சித் தாசின் சிமையவெற்பில் விள்ளுங் கொடுஞ்சுர வெவ்வழற் காவி வெதும்பியுடற் பொள்ளுஞ் சிறுபெடைக் கஞ்சிறை நிழற் புரக்குமன்றிற் கொள்ளுங் குணனறிந் தாற்செல்வ ரோவன்பர் கோற்றொடியே (271) பருவங்கண்டு பெருமகள் μεοιδιώ. (இ-ஸ்.jதலைவன்பிரியும்போதுகார்காலத்துக்கு முன்னே வருவலென்று குறிப்பாற் கூறிப்போயினனாதலாலே கார்ப்பருவங்கண்டு தலைவி புலம்பிக் கூறுதல். ஈயாக் கொடிய ரிதயமொத் தேகறுத் தெங்குமொலித் தோயா துறவிழித் தோங்குவெங் கோபமு முற்றருட்கோர் தாயா யொளிர்பெரு மான்ஷம்சுத் தாசீன் றடஞ்சிலம்பிற் காயா வருமழைக் கார்கண்டும் வந்திலர் கன்னெஞ்சரே. (272) 140