பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைவாய்த் துரும்பி னழிநீர் பொழிதர வற்பகலு முலைவாய்த் துயிலுண வெல்லா மொழித்துள் ளுருகியெண்ணெண் கலைவாய்ப் பொலிபெரு மான்ஷம்சுத் தாசீன் கனகவெற்பின் மலைவாய்க் கிடக்கு மயிலனை யாட்கென் வழுத்துவதே. (277) இதுவரையும் பதினேழாம்நாள் நிகழ்ச்சி. பாகனொடு சொல்லல். (இ-ள்.) சோகங்கொண்டதலைவன் தேர்ப்பாகனோடு தேரை விரைந்து நடாத்தச் சொல்லுதல். ৯ে பார்கண் டுவந்த வலவா விரைதியிப் பாவிவருந் தேர்கண் டுவந்துவந் திப்பதற் கேசெக மேழுமெச்சுஞ் சீர்கண் டுவந்தபு மான்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பிற் கார்கண்டு வந்தகண் ணிகண்டு மாழ்குமுன் காரிகையே. (278) மேகத்தோடு சொல்லல். (இ-ள்.) தலைவன் வருங்காலத்து மேகத்தை நோக்கிக் கூறுதல். சிரித்தே தரும்பெரு மான்ஷம்சுத் தாசீன் சிலம்பகத்தென் பரித்தேர் வரவைப் பகருதற் கோவன்றிப் பாரமுலை கரித்தே யுயிரறக் காய்வதற் கோமுன் கடிந்தெழுந்தீர் தரித்தே சொலுஞ்சொலுஞ் சொல்லிற் பயனுள தண்முகிலே. (279) பாங்கி வலம்புரிகேட்டவன்வர வறிவுறுத்தல். (இ-ன்.) வலம்புரிச் சங்கோசையைக் கேட்டுத் தோழி தலைவன் வரவைத் தலைவிக்கறிவித்தல். பேரேந்தி நின்றநற் பெண்ணனங் கேயஞ்சிப் பேதுறல்பைங் காரேந்தி நின்றகை யான்ஷம்சுத் தாசீன் கனகவெற்பிற் றேரேந்தி நின்றசங் கோசைகண் டாயினித் திக்கனைத்துஞ் சீரேந்தி நின்றநம் மன்பர்வந் தாரென்னத் தேர்ந்தருளே. (280) வலம்புரி கிழத்தி வாழ்த்தல். (இ-ள்.) வலம்புரிச்சங்கைத் தலைவி வாழ்த்தல். கொந்துற்ற தார்ப்புயக் கோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவாய்த் தந்துற்ற வெண்புகழ் தானென வோங்கித் தழைக்குகவே நொந்துற்ற வெந்துயர் நோயற வன்பர் நுவல்பரித்தேர் த்துற்ற தென்ன மவுலுற்று நின்ற வலம்புரியே. (28/) 142