பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவன் வந்துழிப் பாங்கி நினைத்தமைவினாதல். (இ-ஸ்.) தலைவன் வந்தவிடித்துத் தோழி தலைவியை நினைத்ததுண்டோ? வென்று கேட்டல். - - முனைத்தனை யாவருண் மால்ஷம்சுத் தாசீன் முதிர்கிரிவாய்ச் சினைத்தனை யாசைக் கெழுந்தனை யாயது தீர்ந்தபின்னுந் தினைத்தனை யாயினுஞ் சித்தமொன் றாகவித் தீங்கரும்பை நினைத்தனை யாவிலை யாநிகழ்த் தாயென் னெடுந்தகையே. (282) வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைவன் பொருளிட்டி வந்த இற்றைத்தினம் முப்பது நான்காநாளென்க, முப்பத்து நான்கென்னுங் கணக்கு எற்றாற் பெற்றதெனின், 'களவினுட்டவிர்ச்சி வரைவி mட்டந், திங்க விரண்டி னகமென மொழிப' என்னும் இறையனாரகப் பொருட் சூத்திரவுரையில் பொருளிட்டி வந்த தலைவன் ஆறுநாளில் வரைவு முடிப்பனென்று கூறியதனாலும் தலைவன்றலைவியைக் கண்ட பதினெட் டாநாளிற் பொருள்வயிற் பிரிந்ததனாலும் ஐம்பத்தாறாநாள் வரைவு முடிந்ததாகக் கூறுதலாலும் என்க. அற்றேல் "வரைவிட்ை வைத்துப் பொருள்வயிற் பிரிவோ, ரிருதுவின்கண்ணுடைத் தென்மனார் புலவர் எனக்கூறினாராலோவெனின், இருதிங்களென்றது எல்லை கடவாமைக்குக் கூறியதன்றி இரு திங்களுள் வரக்கூடாதென்னும் யாப்புறவின்மையினென்க. ஆயின், “வரைவினிட்டந்திங்களிரண் டினக" மென்றதனால் அறுபதாநாள் மணமுடிந்ததாகக் கூறினா லென்னையெனின், அச்சூத்திரவுரையில் திங்களிரண்டினு நான்கநாளிருக்க மணமுடிப்ப தியல்பென்று கூறியதனால் கூறலாகாதென்க. மாதத்தினந் தமாகிய நான்கு நாட்கள் மணத்துக்கு விலக்கப்பட்டனவென்று சோதிடநூலார்சிலர் கூறுதலாலிங்கனங் கூறியது போலும். தலைவனினைத்தமை சேப்பல். (இ-ள்.) வெளி அறந்தான் வளர்த்தும்பு மான்ஷம்சுத் தாசீ னருட்கிரிவாய்ப் புறந்தாழ் கருங்குழற் பூவைமின் னாளையப் பூங்குழலிற் சிறந்தா ரிருள்செய் சிறுநெறிக் கானத்துஞ் சித்தம்விட்டு மறந்தா லலவோ நினைத்திடல் வேண்டுமென் மாதரசே, (283) ஆற்றுவித் திருந்த வருமை சாற்றல். (இ-ள்.) பாங்கி தலைவியை யாற்றுவித்திருந்த அருமையைத் தலைவனுக்குக் கூறுதல். - இந்தா மெழின்முகத் தேந்திழைக் குன்பிரி வெய்தவம்பொன் றந்தா தரிக்கும்பி ரான்ஷம்சுத் தாசீன் றடத்தகத்துன் சந்தா டவிநதி யூர்மலை தண்புகழ் சாற்றிமனச் - சிந்தா குலந்தவிர்த் தேனிருந் தேன்றிறற் றேர்மன்னனே. (284) 143