பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவற்றுள்-என்பொருட் பிரிவுணர்த்தேந்திழைக் கென்றலும் பாங்கி தலைவிக்கவன் செலவுணர்த்தலுமாகிய இரண்டும் பிரிவறிவுறுத்தற்கும் நின்பொருட் பிரிவுரை நீயவட் கென்றலொன்றும் பிரிவுடன் படாமைக்கும், நீடே னென்றவ னிங்க லொன்றும் பிரிவுடன் படுத்தற்கும், தலைவி யிரங்கலும் பாங்கி கொடுஞ்சொற் சொல்லலும் பருவங்கண்டு பெருமகள் புலம்பலும் இறைமகண் மறுத்தலும் அவனவட் புலம்பலுமாகிய ஐந்தும் பிரிவுழிக்கலங்கற்கும், வருகுவர் மீண்டெனப் பாங்கி வலித்தலும் இகுளை வம்பென்றலும் அவர் துதாகி வந்தடைந்த திப்பொழு தென்றலுமாகிய நான்கும் வன்பு றைக்கும், தலைமக ளாற்றலொன்றும் வன்பொறைக்கும், பாகனொடு சொல்லலும் மேகத்தோடு சொல்லலுமாகிய இரண்டும் வரும்வழிக் கலங்கற்கும், வரவறிவுறுத்தல் முதலாகிய ஐந்தும் வந்துழி மகிழ்ச்சிக்கு முரியன. - வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிதன் முற்றிற்று. களவியல் முற்றிற்று. அஃதாவது-தலைவன் தலைவியைக் குரவர் முதலியாயினோர் கொடுப்பவுங் கொடாதொழியவும் கற்பிற்கு நிமித்தமாகிய வதுவைச் சடங்கொடு பொருந்தி மணஞ்செய்து கோடல்; ஆதலாலிது கற்பின் பாற்படுமென்க; இவ்வரைவு-வரைவு மலிவும் அறத்தொடு நிற்றலுமாகிய இரண்டு வகைப்படும்; அவற்றுள், வரைவு மலிவு. அஃதாவது-வரைவு தொடங்கி நடக்கு முயற்சி மிகுதல்; அது வரைவு முயல்வுணர்த்தல் வரைவெதிர்வுணர்த்தல் வரைவறிந்து மகிழ்தல் பராவல் கண் டுவத்தலென நான்கு வகைப்படும்; அவை வருமாறு: காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக் குணர்த்தல். (இ-ஸ்.) தலைவன் தனவிலையாகத் திரவியங் கொடுத்ததைத் தோழி தலைவிக்குக் கூறுதல். சொன்மலை வாணர்பி ரான்ஷம்சுத் தாசீன்றொன் னாடனையா யுன்மலை மாமுலைக் குள்ளுடைந் தோடிப்பின் னுற்றிறைஞ்சப் பொன்மலை வந்தெனப் போர்மலை தோளன்பர் போந்தளித்தர் கன்மலை போலுங் கனமலை வெம்முலைக் கைவிலையே. - (285) காதலி ស្មៅ மகிழ்ச்சி யுள்ளல். (இ-ஸ். தலைவன் விடுத்த முலைவிலைப் பொருள்களைக் கண்டு நம்மகட்கு மணஞ்செய்யுங் காலமென்று நற்றாய் மகிழு முள்ளத்து மகிழ்ச்சியைப் பாங்கி நினைத்துக் கூறுதல். 144