பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலைச் சிலையனன் னான்ஷம்சுத் தாசி னருட்சிலம்பின் சோலைக் குயின்மொழித் தோகைநல் லாயன்பர் சூட்டுமலர் மாலைக் குவகை மலிதா நம்மனை மாமுகமுங் காலைக் கமல மெனவல ராநிற்குங் காசினிக்கே. (286) பாங்கிதமர்வர வெதிர்ந்தமை தலைவிக் குணர்த்தல். (இ-ள்.) தலைவன்தமர் மணங்கூறி வந்துழித் தலைவிதமர் மணமெதிர்ந்தமை பாங்கி தலைவிக் குணர்த்தல். கொற்றத்தி னோங்குமென் கோன்ஷம்சுத் தாசீன் குளிர்வரைசேர் செற்றத்தி னோங்கயிற் சேல்விழி யாயனை செப்புபல சுற்ற்த்தி னோரெதிர் சூழ்தர நின்மணந் தோய்நாநம் முற்றத்தி னோங்கி முழங்குவ தன்பர் முழுமுரசே (287) தலைமக ளுவகை யாற்றாதுளத்தோடு கிளத்தல். (இ-ஸ்) தலைவி மகிழ்ச்சியடங்காது நெஞ்சோடு கூறுதல். பாரோ ரலரும் பழியு மறத்துயர் பாறமதன் றேரோ டலையத் தெருவினெஞ் சேயுற்ற திக்கனைத்துஞ் சீரோ ருருவெனுஞ் சேய்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பிற் காரோ டிகலிக் கறங்குவ தன்பர் படிமுரசே, (288) தலைவனைப்பாங்கி வாழ்த்தல். (இ-ஸ்.) தலைவனைத் தோழி புகழ்தல். முடிமாலை சூட்டும்பி ரான்ஷம்சுத் தாசீன் முதிர்கிரிவாய் வடிமாலைக் கூந்தன் மயிலனை யாடுயர் மாறவம்பொற் கடிமாலை மாலைக் கடியென வேதந்த காதலர்சிற் றடிமாலை காலையெக் காலமும் வாழி யருள்பெறவே. (28%) தலைவி மணம்பொருட்டாக வணங்கைப் பராநிலை காட்டல். (இ-ஸ்.) தலைவி மணம் நிமித்தமாகத் தெய்வத்துக்குச் சிறப்புச்செய்து 'வாழ்த்திக்கொண்டு நிற்கு நிலையைப் பாங்கி தலைவனுக்குக் காட்டுதல். இணங்கா ரடுகரிக் கோன்ஷம்சுத் தாசி னிருஞ்சிலம்பிற் சுணங்கா ரிளமுலைத் தோகையன் னாளுளந் தோய்தாநின் மனங்கா ரணமா மறைபல வோதி மதித்தனங்கை வனங்கா விருந்து மகிழ்வது பாரென்றன் மன்னவனே. (290) 145