பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்னெறி நாடியே மெய்ப்பொருள் தேடுக கலி சந்த விருத்தம் கல்லி னகத்திற் கேகயத்தை கயவர் கலங்க வழைத்த நபி யுல்லா மீது யது தினமு முகந்து விலகல் தவிர்த் தேவ லெல்லா மொழுங்கா நடந்து வந்த யேந்தலான ரெட் சகரே மல்லிகைப்பூ மாலை யணி மன்னரெனு தம்தா ஷினே. பல்லுயிரெல்லாந்துதிக்கும் பாத்தியர் மெஞ்ஞான வழி சொல்லுஞ் செயலு மொன்றாகத் துடர்ந்து ஞானதீட்சையுற்று யில்லகத்தின் சுடரிலங்க வெத் தினமு முற் றுணர்ந்த மல்லிகைப்பூ மாலையணி மன்னரெனு தம்தாவினே. அல்லறவே திரு ஞான வமிர்த வழிக்குரிய வராம் முல்லை மலரி னெயிருடைய மோட்ச செய் குமன்சூரு ஹல்லாஜுடைய கருணைமிகு கவர்ந்துயுளத்தி லருட் கனிந்த மல்லிகைப் பூ மாலை யணி மன்னரெனு தம்தா ஷினே : தம்தாஸ் ஷெய்கு அப்துல் காதிறு என்ற பெயர் செய்தக் காதிறு செய்தக்காதி” 'சைதகாதி சீதக்காலி என்றெல்லாம் வழங்கி வருகிறது. 'சீதக்காதி' என்பது அப்பெயரின் மரூஉ ஆகும். அது போன்றே ஷம்ஸ்'தாஸிம் என்ற பெயர், தமுஸ்தாசிம் ஷம்ஸ்ாதாஸின்', 'தமுதாoன் தம்தாசீன் என்றெல்லாம் வழங்கி வருகிறது. 'தம்தாஸ்” என்பது அப்பெயரின் மரூஉ ஆகும். வெளியூர்கள் அல்லது வெளிநாடுகளின் புலவிடங்களுக்குச் சென்று வரக்கூடிய மேலப்பாளையம் ஊர்வாசிகளை, அப்பகுதிகளில் வதியும் மக்கள் சந்திக்க நேரிட்டால், 'உங்கள் ஊரில் தம்தாஸ் நலமாக இருக்கின்றாரா?' எனப் பரிவுடன் உசாவுமளவிற்கு நற்கீர்த்தி பெற்றிருந்தார் ஷம்சுத்தாசீனவர்கள். புரவலர் போற்றிய பாவலர் தமது ஞானாசிரியர் வழிமுறையில் வந்தவரென்பதனால், கா.ப. செய்கு தம்பிப் பாவலரவர்களது. இளமைப் பருவ முதலே அவரை

  • அநுகூல புஞ்சம் (1936) பக். 29.

13