பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கண்டோன் மகிழ்தல். (இ-ள்.) தலைவி தெய்வத்தை வாழ்த்துதலைக் கண்ட தலைவன் மகிழ்தல். சின்னஞ் சிறியா ளுலகியல் யாதொன்றுந் தேர்ந்தறியா ளன்னம் பிடிநிகர் வாள்கற்ற தேதிவ் வணங்கினைத்தெவ் பின்னம் படப்பொரு வேள்வும்சுத் தாசீன் பிறங்கலிலோர் தன்னந் தனியாய்த் தகுமலர் தூஉய்நனித் தாழ்வதற்கே. - (29/) இவற்றுள்-காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக் குணர்த்தலும் தலைவி மணம் பொருட்டாக அணங்கைப்பரர்நிலை காட்டலுமாகிய விரண்டும்வரைவு முயல்வுணர்த்தற்கும், பாங்கி தமர்வரை வெதிர்ந்தமை தலைமகட் குணர்த்த லாகிய வொன்றும் வரைவெதிர்வுணர்த்தற்கும், நற்றாயுள்ள மகிழ்ச்சியுள்ளலும் உவகையாற்றா துளத்தொடு கிளத்தலுந் தலைவனைப் பாங்கி வாழ்த்தலுமாகிய மூன்றும் வரைவெதிர்ந்து மகிழ்வதற்கும்,தலைமகளணங்கைப் பராநிலை கண்டோன் மகிழ்தலாகிய வொன்றும் பராவல் கண்டுவத்தற்கு முரியன. இதுவரையும் ஐம்பத்தொன்றாநாள் நிகழ்ச்சி. வரைவுமலிவு-முற்றிற்று. அறத்தொடு நிற்றல். அஃதாவது-களவை முறையே வெளிப்படுத்தி நிற்றல். முறையே வெளிப்படுத்தி நிற்றலாவது; தலைவி பாங்கிக் கறத்தொடு நிற்றல். பாங்கி செவிலிக்கறத்தொடு நிற்றல். செவிலி நற்றாய்க் கறத்தொடு நிற்றல். நற்றாய் தன்னையர்க் கறத்தொடு நிற்றலெனக் கொள்க. அறத்தொடு நிற்றற்குப் பொருள்; முறையே வெளிப்படுத்தி நிற்றலென்பது; இப்பொருள் எவ்விடத்திற்கு மாகாது இவ்விடத்திற்கு மாத்திரமென்று கொள்க. அது - முன்னிலை முன்னிலைப்புறமொழியென இருவகைப்படும், அவை வருமாறு: கையறுதோழி கண்ணிர்துடைத்தல்.’ (இ-ள்.) களவுப் புணர்ச்சியால் மிகவும் அவரெழுதல் கண்டு தந்தையர் முதலாயினோர் வெறுப்புற்றதறிந்ததலைவன் பிரிந்தேக, அப்பிரிவாற்றாமையா லழுதுகொண்டிருந்த தலைவியை ஆற்றிக் கையற்றதோழியருகிருந்து கண்ணிர் துடைத்தல். கையறல் செயலறல். - பந்தகத் தாசை பரிந்திலை பைந்துணர் பற்றிலைசெய் சிந்தக வண்டலுஞ் சேர்த்திலை யன்னை சினத்ததுண்டோ நொந்தகம் வாடினை ந்ோற்றினை கண்ணிர் நுடங்கிடையே வந்ததென் ஹாமீம் புரஷம்சுத் தாசீன் மகிழ்கிரிக்கே. (292) 146