பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலுழ்தற்குக் காரணங் கூறல். (இ-ன்.) தலைவியழுதற்குக் காரணஞ் சொல்லுதல். துங்குங் கனவிற் றுணிந்திறை தோய்தரத் துஞ்சலற்றுள் ளேங்கும் படியெழுந் தேனினைந் தேனுடைந் தேழுலகுந் தாங்கும் பெருந்திறத் தான்ஷம்சுத் தாசீன் றடங்கிரிபோன் றோங்கு மொளிர்முலை யாயிலை வேறொன்று முற்றதுவே. (293) தலைவன் றெய்வங்காட்டித் தெளிப்பத் தெளிந்தமை கூறல். (இ-ஸ்.) தலைவன் றெய்வத்தைக் காட்டிக் கரியென்று சூளுறவு சொல்ல மெய்யென்று தெளிந்த அதனைப் பாங்கிக்குப் பொருந்தக்கூறுதல். தருகார் நிகர்கரத் தான்ஷம்சுத் தாசீன் றணிச்சிலம்பிற் குருகார் நிழலல வண்டும் பலவுள கூண்டவின்பம் பெருகா ரமுதனைப் யாய்கப டாயன்பர் பேணியெம்மை யருகா யிருத்தி யறைந்தபல் சூள்கண்ட டறைவதற்கே. (294) இறைவி தலைவனிகந்தமையியம்பல். - (இ-ள்.) தலைவி தலைவனிங்கினமை பாங்கிக்குக் கூறுதல். வற்போ லுயர்முலை மங்கைநல் லாயுண் மறக்கிலனென் றற்போ டறைந்து மகன்றன ரன்ப ரவனிமுற்று மற்போர் வலர்பெரு மான்ஷம்சுத் தாசீன் மலையவெற்பிற் சொற்போ னடையுந் தொடர்ந்தறிந் தாரிலைச் சொல்லுதற்கே. (295) பாங்கியியற்பழித்தல். - (இ-ள்.) தலைமகனியலைப் பாங்கி பழித்துக் கூறுதல். வல்லார் புகழுமெம் மான்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி னல்லார் குழலணங் கேமற வார்வரு வாரிருப்ப்ார் நல்லா ரெனநினைந் தேனவ ரின்று நடுவிகந்த பொல்லா ரெனவெழுந் தாரகன் றார்.மிகப் புண்ணியரே. (296) தலைமகளியற்படமொழிதல். (இ-ஸ்.) அங்ங்னங் கூறக்கேட்ட தலைமகள் தலைமகனியற்கையோரியல்புபட மொழிதல். கைக்கு முலைக்குங் கடுகிநின் றாலுங் கனவொடுள்ள மெய்க்கும் படிவரு வாரிருப் பாரெதிர் மேவலரை மொய்க்கும் பெருந்தள வேள்வடிம்சுத் தாசீன் முதிர்கிரிவாய்ப் பொய்க்குங் குணத்தர் செயலல வேயிது பொற்றொடியே. (297) 147