பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வம் பொறைகொளச் செல்குவமென்றல். (இ-ள்.) தலைவர் தெய்வத்தின்மேற் பிரியேனென்றாணைகூறிப்பிரிந்துபோனா ராதலால் அத்தெய்வம் சீறாதபடி அவர் எங்கட்குக் குற்றஞ் செய்தாரல்லர், நீ பொறுத்துக்கொள்ளென்று வேண்டிக் கோடற்கு இருவேமும் போதுவேமென்று தலைவி பாங்கியுடன்கூறுதல். கோபந் தருபடைக் கோன்ஷம்சுத் தாசின் கொழுங்கிரிக்கோர் தீபங் கடுத்தநந் தேரன்பர் முன்னமைச் சேர்ந்தினிவெஞ் சோபந் தரப்பிரி யேனெனத் தெய்வத்தைச் சூழ்ந்திசைத்த பாபம் பொறுக்கப் பணிகுவம் வாவென்றன் பைந்தொடியே. (298) இல்வயிற் செறித்தமையியம்பல். (இ-ள்.) தலைவி தன் மெய் வேறுபாட்டாலும் ஊரிலுள்ளாரலர்தூற்றுதலாலும் நற்றாயுளத்தில் வெறுப்பாகி மனையிடத்தி லென்னைக் காவல் செய்தாளென்று பாங்கிக்குக் கூறுதல். உளையொன்று வெம்பரி வேள்வடிம்சுத் தாசி னொளிர்சிலம்பில் வளையொன்று கைத்தல மங்கைநல் லாய்பிறர் வாயலருங் களையொன்று மேனியுங் கண்டன ளாய்மனை காவலிட்டாள் தளையொன்று கண்டிலள் கண்டா லிடுவள்மெய்ச் சத்தியமே. (299) - செவிலி கனையிருளவன்வரக்கண்டமை கூறல். (இ-ள்.) செவிலித்தாய் செறிந்த இருட்குறியிடத்துத் தலைவன் வரக் கண்டாளெனத் தலைவி பாங்கிக் குணர்த்தல். திருவுற் றிலகுபு மானஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பின் மருவுற்ற கஞ்ச மதிமுகத் தோய்நென்னன் மன்னுமன்பர் தருவுற்ற நங்குறி சார்வுற்று மீண்டதைத் தாயனங்க - னுருவுற் றிரவி னுலவுற்ற தோவென் றுலைந்தனனே. (300) எறிவளைவேற்றுமைக்கேது வினாதல். (இ- ள்.) செவிலித்தாய் தலைவியின் தவயவ வேறுபாட்டுக்குக் காரண மென்னை யென்று பாங்கியைக் கேட்டல். - முலையும் பசப்ப மொழியுந் தளர முழுதுமுட னிலையுங் குலைய நிகழ்ந்ததென் னோநித்த நோலரை மலையும் படிபொரு மால்ஷம்சுத் தாசீன் மலையமின்னாட் கலையும் பொருகணல் லாய்புனங் காவ லகன்றபின்னே. (30/) 143