பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாங்கி வெறி விலக்கல். (இ-ள்.) செவிலித்தாய் வெறியாட்டாளனையழைத்து மகட்கு நோயுற்றவாறும் அது தீருமாறுஞ் சொல்லவேண்டுமென்று கேட்புழித் தெய்வம் வந்தாடும்போது பாங்கி அத்தெய்வத்தை யாட வேண்டாமென்று விலக்குதல். வெறியாட்டாளன் ஆடு பலிகொடுத்தாற்றீருமென்புழி அவ்வாட்டைக் கொல்லாமல் விலக்கலெனினு மமையும். - மெய்க்கும் பெருந்தவ வேள்வும்சுத் தாசீன் வியன்சிலம்பிற் பொய்க்குந் துடியிடை யாய்முனி யேலுமைப் போற்றுதுமா லுய்க்கு நெறியறி யாதவ மேயுவந் தோம்பறியா மைக்கு மிகைக்குமல் லாலக லாதிவள் வண்டுயரே. (302) - வெறி விலக்கிய வழி செவிலி வினாதல். (இ-ஸ்.) வெறியாடல் விலக்கிய காரணத்தைப் பாங்கியுடன் செவிலித்தாய் கேட்டறிதல். பொன்னார் துயரம் புலரவென் றெண்ணிப் புகுந்தவெங்கண் முன்னார் வெறியை விலக்கினை போந்தனை மூன்றுலகுந் தன்னா ருயிரெனு மால்ஷம்சுத் தாசீன் றடஞ்சிலம்பி . னின்னா ருளத்தி னிகழ்வென்கொ லோசொல்லெ னேரிழையே. (303) பூத்தரு புணர்ச்சியாலறத்தொடு நிற்றல். (இ-ள்.) பூவைக் கொடுத்ததனாற் புணர்ந்த களவை வெளிப்படுத்தித் தோழி கூறுதல். வரத்தா லுயர்ந்தபு மான்ஷம்சுத் தாசீன் வரைக்கொருவன் கரத்தா மரையில் விழித்தா மரைகள் கவியுநின்ற தரத்தா லரிவாய் வருவாய் பெறுதி தருதுமென - வுரத்தா லளிப்ப நயணமொத் தேற்றங் குவந்தனளே. (304) புனறரு புணர்ச்சியாலறத்தொடு நிற்றல். (இ-ள்.) புனலாற் கூடும் புணர்ச்சியை வெளிப்படுத்திக் கூறுதல். பிழியோ டலங்கற்பெம் மான்ஷம்சுத் தாசீன் பிறங்கலிடைக் குழியோ டுயர்வனிக் கோனதி பாய்ந்து குடையவுந்திச் சுழியோ டிகல்சுழி சூழச் சுழித்துத் தொடர்ந்தனங்கைப் பழியோ டெடுத்தது பார்த்தெடுத் தானொரு பார்மன்னனே. (305)