பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களிறுதரு புணர்ச்சியாலறத்தொடு நிற்றல். (இ-ஸ்.) யானையைத் தடுத்துக் காத்துக் கூடும் புணர்ச்சியை வெளிப்படுத்திக் கூறுதல். - காரானை யன்னகைக் கோன்ஷம்சுத் தாசின் கனவெற்பி லோரானை முன்னு முரத்தானை யுற்றெழுந் தோங்குகொங்கை யிரானை பின்னு மிகறரப் போர்தடிந் தேற்றவெற்றிச் சீரானை யென்று மறப்பள்கொ லோநின்றன் றேமொழியே. (306) தலைமகள் வேற்றுமை கண்டு நற்றாய் செவிலியை வினாதல். (இ-ள்.) தலைவி வேறுபாட்டை நற்றாய் தெரிந்து அதனுண்மையைச் செவிலியைக் கேட்டறிதல். பாலுங் கசப்பப் பழமும் புளிப்பப் படர்ந்தமுலை மேலும் பசப்ப விழிநீ ரரும்ப மிடைந்தனளாற் கோலும் பெருந்தவக் கோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவா யேலுங் குணத்தனங் கேயிசை யாயுற்ற தேந்திழைக்கே. (307) செவிலி நற்றாய்க்கு முன்னிலை மொழியாலறத்தோடு நிற்றல். (இ-ள்) முன்னிலைப்புறமொழியாலுணர்த்தாது முன்னிலை மொழியினாலே களவை வெளிப்படுத்திநற்றாய்க்குச்செவிலி கூறல். நாவொன்று மெய்ந்நலத் தோன்ஷம்சுத் தாசி லைத்தகிரிக் காவொன்று கூந்தலைக் கன்னிநல் லாயொரு காமன்வந்து பூவொன்று தந்து புனலிடைக் காத்துப் புகுந்தமந்த மாவொன்று வென்று மருவின னாமென்ன மாயமிதே. (308) இவற்றுள்-வெறி விலக்கலொன்று முன்னிலைப் புறமொழிக்கும், ஏனைய பதினாறு முன்னிலை மொழிக்கு முரியன. அறத்தொடு நிற்றன் முற்றிற்று. உடன்போக்கு. அஃதாவது தலைவன்தன்னுர்க்குத்தலைவியை யுடன்கொண்டு போதல்; அது போக்கு கற்பொடு புணர்ந்த கவ்வை மீட்சியென மூன்று வகைப்படும்; அவற்றுள்-போக்காவது போக்கறிவுறுத்தல் போக்குடன் படாமை போக்குடன் படுத்தல் போக்குடன் படுதல் போக்கல் விலக்கல் புகழ்தல் தேற்றல் என எட்டு கைப்படும்; அவ் வெட்டும்பாங்கி தலைவற் குடன் போக்குணர்தல் முதல் 150