பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுனையுந் தடமும் வரையும் பொழிலுந் தொடர்ந்துபயின் மனையு மறந்த வசையுண்டென் றாரினி மாற்றலரு நினையுந் திருப்பத வேள்வும்சுத் தாசி னெடுங்கிரிவாய்ப் புனையு மலர்க்குழ லாயென்கொ லோவவர் போதனையே. (3/3) - தலைவி நாணழி விரங்கல். - (இ-ஸ்.) உடன்போக்கில் நாணழியுமே யென்று அதற்குத்தலைவி வருந்துதல். வெளிப்பணி நீப்பினு மெய்ப்பணி யாகி விளங்குமந்தா ணொளிப்பணி நீப்பவ ருண்டுகொ லோவென்று முற்றபெருங் களிப்பணி வேந்தர்பி ரான்ஷம்சுத் தாசீன் கனகவெற்பிற் றுளிப்பணி கூந்தன்மென் றோகைநல் லாயிவ்ண் சொல்லுதற்கே. (31.4) கற்பு மேம்பாடு பாங்கி கழறல். - - (இ-ள்.) தலைவிக்குப் பாங்கி கற்பின் பெருமை கூறுதல். நானொன்று மேன்மை நலத்ததென் றாலுமந் நானகத்தும் பூனொன்று கற்பே பெரிதுகண் டாயிந்தப் பூதலத்தின் மாணொன்று வாய்மையெம் மான்ஷம்சுத் தாசீன் மலையவெற்பிற் சேனொன்று கூந்தனல் லாய்பொன்ன னார்க்கெந்தத் தேயத்துமே. (3/5) • . தலைவி யொருப்பட்டெழுதல். (இபள்.) தலைவி தலைவனுடன்றுணிந்துபோகச்சம்மதித்தல். ஊரோ ரலரு முறவினர் கோபமு முற்றபெரும் பாரோர் பழியும் பலிப்பவிங் காக்கிப் படர்வலென்றுங் காரோ டிகல்கரத் தோன்ஷம்சுத் தாசின் கனகவெற்பின் - சீரோ ருருவனை யாயன்பர் சொற்றவத் தீச்சுரமே. - (3/6) பாங்கி சுரத்தியல் புரைத்துழித் தலைமகள் சொல்லல். (இ-ள்.) பாலையின் கொடும்ை கூறிய தோழிக்குத் தலைவி கூறுதல். கொல்லு மமளி கொலைமத வேள்கணை கூர்த்தவன்னை சொல்லும் பெரும்பழி தோய்குழற் குன்னலர் துன்னுமுட லெல்லு மொடிக்கும்பெம் மான்ஷம்சுத் தாசி னிருஞ்சிலம்பிற் - செல்லுஞ் சிறுசுரந் தீயதன் றோவென்றன் சேயிழையே. (3/7) பாங்கி கையடைகொடுத்தல். (இ-ஸ்.) தலைவனுக்குத் தலைவியைப் பாங்கி யடைக்கலங் கொடுத்தல். 152