பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிஞ்சா விளமுலை மீண்டுந்தி காட்டி விரிந்தமுடி பஞ்சா வெளுப்பினும் பாவையன் னாளையிப் பாருலகின் மஞ்சா யொளிர்பெரு மான்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி லஞ்சா தளித்தியை யாவின்று போலென்று மன்புவைத்தே. (3/8) பாங்கி வைகிருள் விடுத்தல். - (இ-ள்.) இருளார்ந்த இடையாமத்திற் பாங்கி தலைவியைத் தலைவனுடன் விடுத்தல். - கூப்பிட் டுதவுமென் கோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவாய்ச் சேப்பிட்ட மெல்லடித் தேமொழி யேநிற் சினந்தவர்வாய்க் காப்பிட்டு நெஞ்ச மளவிட்டுச் சொற்ற வலர்மொழிக்கோர் - காப்பிட்டு நாளைக் கடுகவல் யானுமக் காய்சுரமே. (3/9) இதுகாறும் ஐம்பத்திரண்டாநாட் செய்தியென் றுணர்க. - தலைமகளைத் தலைமகன் சுரத்துய்த்தல். ஆடும் பொழில்விடுத் தோநதி தாண்டின மார்ந்தமரக் காடுங் கடந்து கலந்தன மானற் கவிஞரெல்லாங் கூடுந் திருமுன்றிற் கோன்ஷம்சுத் தாசீன் குலக்கிரிவாய் நீடுங் கனற்சுர மங்கைநல் லாயிது நேர்ந்தருளே. (320) தலைமகன்றலைமகளசைவறிந்திருத்தல். (இ-ள்.) தலைவியினது வருத்தத்தையறிந்து தலைவனவளுடனிருத்தல். கற்றே யலரடி கன்றிய மேனி களைத்ததினி - விற்றே ரனிதுதன் மெல்லிய லேமறு வேந்தர்வந்து குற்றேவல் செய்யுமென் கோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவாய்ச் சற்றே தரித்துச் சலிப்பொழி வாமிந்தத் தண்பொழிற்கே. (32/) உவந்தலர்சூட்டியுண்மகிழ்ந்தரைத்தல். (இ-ஸ்.) தலைமகளை மகிழ்ந்து அவள் கூந்தற்கு மலரைச் சூட்டி அதனாற் பரவசமகிழ்ச்சி யடைந்து கூறுதல். உவகை அறிவொடு கூடியது. மகிழ்ச்சி அறிவழிந்தது. என்னை? 'உள்ளக் களித்தலுங்காண மகிழ்தலுங் கள்ளுக்கில் கர்மத்திற் குண்டு என்னுந் திருக்குறட்குப் பரிமேலழகர் கூறிய வுரையனு முனர்க, --- எய்திட்ட வன்கரத் தின்னலெலாமறு வேற்றவர்க்குப் பெய்திட்ட பொற்கைப்பெம் மான்ஷம்சுத் தாசீன் பெருவரைவாய்க் 153