பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொய்திட்ட குந்தமுன் கொண்டையிற் சூட்டிக் குலவறயான் - செய்திட்ட மாதவ மென்னைகொ லோவென்றன் றேமொழியே (322) கண்டோ ரயிர்த்தல். (இ-ஸ்.) வடிவின் மேம்பாட்டாற் றலைவனையுந் தலைவியையும் கண்டோ ரையமுறக் கூறுதல். கண்டோர்-பாலைநிலத்தெயிற்றியர். வான்கொண்ட கொண்டலெம் மான்ஷம்சுத் தாசீன் மலையவெற்பிற் றான்கொண்ட வாழ்க்கைய ரோவன்றி வானகஞ் சார்ந்தவரோ ஆன்கொண்ட சீயமும் வேங்கையு மெண்கு முலாவருமிக் - கான்கொண்ட வெவ்வழற் பாலையி லின்று கலந்தவரே. (323) கண்டோர் காதலின் விலக்கல். - (இ-ள்.) மேற்கூறிய கண்டோர் ஆசையுடன் இங்கிருந்து நாளைப் போகலா மென்று வழிச்செலவு விலக்குதல். - - - போதோ விழுந்தது புக்கது வல்லிருட் போந்தமலர் மாதோ வயர்ந்தனண் மாலனை யாயுற்ற வையமெல்லாந் தீதோவக் காக்குமெம் மான்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பின் மீதோர் பொழுதெம் விருந்தயின் ரேகிலென் மெய்ந்நகர்க்கே (324.) தன்பதி யணிமை சாற்றல். - (இ-ஸ்.) இவ்விடத்தில் வைகிப்போதல் வேண்டுமென்று தலைவி கூறியவழித் தலைவனுடைய பதிசமீபத்திலுள்ளதென்று கண்டோர்கூறுதல். கூரம் பனையகட் கோலமு நீயுங் குறித்தெழுந்தாற் றுாரம் பெரிதிலைத் தோய்குன்ற மொன்றுண்டு சூழ்ந்தகன்றா லாரந் தருபுயத் தான்ஷம்சுத் தாசி னருட்கிரியி - னிரஞ் செறிவனி ஹாமீம் qpa/ು கெதிர்வருமே. (325) . . . தலைவன் பதியடைந்தமை சாற்றல். (இ-ள்.) வெளி. வேலையுங் காவியும் வேயுங்கண் ணாய்மலர் மேற்பலபா மாலையுந் தோய்புய மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்பின் சோலையுஞ் சாலையும் வன்னியும் வாவியுஞ் சூழ்ந்தகருப் ப்ாலையு மாடமும் ஹாமீம் புரமுமி தாய்ந்திருளே. ... " (326) இவற்றுள்-பாங்கி தலைவற் குடன்போக்குணர்த்தலும் தலைவிக்குடன் போக் குணர்த்தலுமாகிய விரண்டும் போக்கறிவுறுத்தற்கும், தலைமகன் மறுத்தலும் தலைவி 154