பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஷம்சுத்தாசீனவர்கள் அறிவாரெனினும், 'மெய்ஞ்ஞானத் திருப்பாடற் திரட்டு பதிப்புப் பணியில் செய்குதம்பியவர்கள் துணை புரியத் துவங்கிய காலத்தேயிருந்து, அவ்விருவருக் கிடையேயும் முகிழ்த்திருந்த நேயவுணர்வு மலர்ந்து மணம் வீசத் துவங்கவே, சடையப்ப வள்ளலும் கவி கம்பரும் எனச் சொல்லத் தக்க வகையில் இருவரும் நல்லுறவு பூண்டிருந்தனர். தமது இருபத்தியோராவது வயதில் ஞானியார் திருப்பாடல் பதிப்புப் பணிக்கென சென்னை வந்ததன் பின்னர் செய்கு தம்பி, அரிய தமிழ் இலக்கியங்களுக்கு உரைகள் எழுதியும், தாமே நூல்கள் இயற்றியும், இவற்றினைப் பதிப்பித்தும், பாட்டுக்கள் புனைந்தும், திருக்குறள், கம்ப ராமாயணம், சீறாப்புராணம், முதலிய இலக்கியங்கள் குறித்து, அவற்றையே தம் வாழ்வு முழுவதும் கற்று வந்துள்ள பண்டிதர்களும் வியக்கும் வண்ணம் நயவுரைகள் தந்து சொற்பொழிவுகள் ஆற்றியும் வந்த சீர்மையைக் கண்ட தமிழறிஞர்கள் ஒன்று கூடி அவருக்குப் 'பாவலர்' என்னும். பட்டம் அளித்துப் போற்றினர். பின்னர் "அருட்பா மருட்பா'ப் போரில் ஈடுபட்டுத் தமது நன. சிறந்த நாவன்மை காரணமாக மருள் மங்கவும் அருள் பொங்கவும் செய்து திருவருட் பிரகாசவள்ளலாரது மெய் நேசர்களை மகிழ்வித்தும், தமது முப்பத்து மூன்றாவது வயதில் (கி.பி.1907-ஆம் ஆண்டு) ஒரும் அவதானம் ஒரு நூறும் நிகழ்த்திக் காட்டியும், பாண்டித்துரைத் தேவரவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ் சங்கத்துப் புலவர்களுள் ஒருவராய் வீற்றிருந்து தமிழ்ப் பணியாற்றியும் வந்த பாவலரவர்கள், குன்றின் மேல் வைத்த தீபம்’ எனப் புகழொளி பரப்பலானார். - முன்னொரு போழ்து, பாவலரது ஆசிரியப் பெருந்தகையான சங்கர நாராயண அண்ணாவியாரது கற்பிக்குந் திறனிலும், பாவவரது தமிழ்ப் புலமை யிலும் ஐயுறவு கொண்ட கணபதி என்னும் முதுபெரும்புலவர் பாவலரைச் சந்திக்க நேர்ந்து 'மாற்று உரைத்துப் பார்த்து 'ப் பின் வியந்தவராய் அருகிருந் தோரிடம் 'என்னை யிவன் கோட்டாற்றி னிருந்தவனா, யிரும் தவனா (இவன் கோட்டாற்றில் இருப்பவனா? பெருந் தவத்தை யுடையவனா?) என இரட்டுற மொழிந்த புகழுரையின் நயம் நாடறிந்ததன்றோ? அப்புலவர் பெருமானின் அருள் வாக்கினுக்கேற்ப, புலவர்க்குப் புலவராய் விளங்கிய தமிழத்தாயின் தவப்புதல்வர் செய்கு தம்பிப் பாவலர வர்களுக்கு, தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம்', 'சதாவதானி, நாவலர், 14