பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருந்தா ருயிரைத் திமிர்த்தமு துரட்டிப்பின் செல்லவிடுத் திருந்தா லலவோ வறிகுவிர் நீருமவ் வின்னலையே. (329) செவிலி தன்னிறிவின்மை தன்னை நொந்துரைத்தல். (இ-ள்.) தலைவி போதற்குத் தன் குறிப்பினா லறிவித்த தன்மையை யறிந்திலேனென்று தன்னறிவின்மையை நொந்து செவிலி கூறுதல். நோதல்-வருந்துதல். என்னையும் வீட்டையு மேங்குற நோக்கி யிருவிழிநீர் தன்னையுந் காட்டியம் முன்றிலும் பார்த்த தரத்தையெட்டுப் பொன்னையும் வேட்டபு மான்ஷம்சுத் தாசீன் பொலங்கிரிவாய் முன்னையும் பின்னையு மோர்ந்தில னேயென்ன மோசமிதே. (330) 1 செவிலி தெய்வம் வாழ்த்தல். (இ-ஸ்.) தலைவிக்கு இடையூறு நிகழாவண்ணந் தெய்வத்தைச் செவிலி வாழ்த்துதல். சிந்திப்ப தற்குற்ற தெய்வங்க ளேயெந்தஞ் செல்வியையாஞ் சந்திப்ப தற்கெதிர் தந்தருள் வீர்நித்தஞ் சார்ந்தெவரும் வந்திப்ப தற்குற்ற மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி லந்திப்ப தற்கெமக் கும்மைய லாலில்லை யாந்துணையே. (33/) - இவ்வைந்தும் செவிலி புலம்பலின் விரியென்க. செவிலி நற்றாய்க் கறத்தொடு நிற்றல். (இ-ள்.) செவிலிநற்றாய்க்குத்தலைவிதலைவனுடன்போக்கை வெளிப்படுத்திக் கூறுதல். - காணக் கரிக்குங் கடுஞ்சுரத் தோர்திருக் காளைபின்னே பேணக் கரந்தன ளுன்மக ளென்னினிப் பேசலொன்னார் நாணக் கடிந்தநங் கோன்ஷம்சுத் தாசீனளினவெற்பிற் பூணக் கதிக்கும் புணர்முலை யாய்நென்னற் போதகத்தே. (332) நற்றாய் பாங்கியொடு புலம்பல். (இஸ்)நற்றாயுயிர்ப்பாங்கியுடன்வருந்திக்கூறுதல். எல்லா மறிந்து மதலா யிசைவி னெனக்கொருசொற் சொல்லா திருந்தவத் தோடமன் றோமகள் சூழ்ந்தவர்க்கோர் நல்லா ருைட்பெரு மான்ஷம்சுத் தாசி னளினவெற்பிற் கல்லாப் பொலிந்த கடும்பரற் பாலை கரந்தனளே. (333) 156