பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவிற் படர்புக ழோன்ஷம்சுத் தாசி னளினவெற்பின் - காவிற் படருங் களிமயி லாமென்றன் கன்னியர்க்கே. (347) செவிலி கலந்துடன் வருவோர்க் கண்டு கேட்டல். (இ-ள்.) உடன்போக்குப் போய தலைவனும் தலைவியும் போல அன்பு கலந்து வழியிடை வரவோரிருவரைக் கண்டு செவிலி வினாதல். அன்றிலும் பேடு மெனவரு வீரிவ் வதரிருவ ரொன்றிய வுள்ளத்தி னுற்றன ரோவுல குங்ககனுந் துன்றிய வென்றியன் மால்ஷம்சுத் தாசீன் சுடர்க்கிரிமேற் கன்றிய வன்னையொ டென்னையு மிங்ங்ன் கவலவைத்தே. (348) - அவர் புலம்ப றேற்றல். (இ-ள்.) செவிலி யிரங்கிப் புலம்புதலை யெதிர்வந்தோர் தெளிவித்தல், தாருடை வள்ளலைக் கண்டனன் யானுமுன் றாழ்குழலை வாருடைக் கொங்கையென் மங்கையுங் கண்டனன் வான்புவிக்கோர் - பேருடை வேந்தர்பெம் மான்ஷம்சுத் தாசீன் பெரும்பகைவாழ் தருடைக் கான்விடுத் தாமீம் புரமின்று சூழ்குவரே. (349) செவிலி புதல்வியைக் காணாது கவலை கூர்தல். (இ-ள்.) செவிலிதன் புதல்வியைக் காணாது துன்ப மிகுதல். மானார் வழியை வழிமுழு துள்ளி மலைந்ததல்லா னானா வறிந்தில னேபிறர் வாய்க்கென் னவில்வலினி பூனா ரயில்வலத் தோன்ஷம்சுத் தாசி னொளிர்வரைமேற் போனான் மகளெங் கெனுமனைக் கென்கொல் புகலுவதே. (350) இவ்வொன்பதுஞ் செவிலி பின்றேடிச் சேறலின் விரியென்க. கற்போது புணர்ந்த கெளவை முற்றிற்று. - அஃதாவது-மீண்டு வருதல். செவிலி புதல்வியைக் காணாது மீண்டு வருதலும் உடன்போய தலைவனுந் தலைவியு மீண்டுவருதலு மடங்கப் பொதுப்பட மீட்சி யென்றார். அது-தெளிதல் மகிழ்ச்சி வினாதல்செப்ப லென நான்கு வகைப்படும்; அவை-தலைவி சேனகன்றமை செவிலி தாய்க்குணர்த்தல் முதல் நற்றாய்கேட் டவனுளங் கோன் வேலனை வினாத லீறாகிய ஆறு விரிகளையுடையன; அவை வருமாறு: 160