பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவி சேணகன்றமை செவிலி தாய்க்குணர்த்தல். (இ-ள்.) தலைவி நெடுந்துரம் போனதைச்செவிலிநற்றாய்க்குச்சொல்லுதல். துருவா விடமிலை யென்றாய் முழுதுந் துருவியுநின் - றிருவா ரமுதைத் தெரிந்தில னேசென்ற சேயொடுநன் கொருவா வருளுடை யோன்ஷம்சுத் தாசி னுறவிலர்வாழ் வருவா வனம்விடுத் தாமீம் புரமங் கடைந் தனளே. /35/ノ இதுவரையும் ஐம்பத்து மூன்றாந்ாள் நிகழ்ச்சி. தலைவன்றம்ழர் சார்ந்தமைசாற்றல். (இ-ள்.) ஐம்பத்து நான்காநாள் தலைவன் மீட்சியில் தமதுரைச் சார்ந்தமை தலைவிக் குணர்த்தல். தம்மென்பது தலைவன்றலைவியரிருவரையும். ஆடுஞ் சுனையிது வண்டலு மிங்கிவை யன்றுனையான் கூடுந் தடமது குன்றுவை பாரென்றுங் கூண்டபுகழ் நீடுங் திறற்பெரு மான்ஷ்ம்சுத் தாசி னெடுங்கிரிமே னாடும் பதியிது நங்கைநல் லாய்முன் னடந்தருளே. (352) தலைவி முன்செல்வோர்தம்மொடு தான்வரல் பாங்கியர்க்குணர்த்தி விடுத்தல். (இ-ள்.) தலைவி தனக்கு முன்னே போகும் அந்தணரிடத்தில் தன்வரவைத் தன்றோழிகட்குச்சொல்லிஅனுப்புதல். - - கற்பிற் பெரிதல நாணென்று நாடிக் கடும்பாற்கா னற்பிற் புகுந்தவென் னண்ணலும் யானு மடைந்ததெல்லாம் பொற்பிற் பொலிந்தபு மான்ஷம்சுத் தாசீன் புதுநகர்சேர் வெற்பிற் புகுமட வீரறை விரென்றன் மெல்லியர்க்கே. (353) ஆங்கவர் பாங்கியர்க்குணர்த்தல். (இ-ள்.) வெளி. கண்டனம் யாமுங்கள் கன்னியை யோர்திருக் காளையின்னே மண்டனர் பாலை வழிவிடுத் திங்ங்ன் மருவுறத்தெவ் பண்டனந் தீர்ந்தபி ரான்ஷம்சுத் தாசீன் பனிவரைவா யண்டன மென்னடை யாயிழை யிருந்த மன்புவைத்தே. (354) பாங்கியர் கேட்டு நற்றாய்க் குணர்த்தல். (இ-ள்.) வெளி. 161