பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னா யழுங்க லடைந்தன ளென்றறைந் தார்சிலர்நம் பொன்னா ளொருதிருப் போரர சோடிவண் பூதலத்தோர் மன்னாதி மன்னனெம் மான்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி ன்ைனா ளிலைவரு மிந்தா ளெனவினி நந்தமக்கே. (355) நற்றாய்கேட்டவனுளங்கோள்வேலனை வினாதல். (இ-ள்.) நற்றாய் தன்மகள் வரவை யறிந்து தலைவனுட் குறிப்பின்னதென்று வெறியாட்டாளனைச் கேட்டல், ஒதுறு மெய்ப்புக ழோன்ஷம்சுத் தாசீ னுயர்தடத்தென் மாதுறு மண்ணலம் மாணிழை யோடென்றன் மாமனைக்கே போதுறு மோவன்றித் தன்மனை கண்டங்குப் புக்குறுமோ. ஏதுறு மோர்ந்திசை யாயயி லாயுவந் தென்றனக்கே. (356) இவற்றுள்- தலைவி சேணகன்றமை செவிலிதாய்க் குனர்ந்தலும்தலைவன்றம்மூர் சார்ந்தமை சாற்றலுமாகிய இரண்டுந் தெளிதற்கும், தலைவி முன்செல்வோர்தம்மொடு தன்வரல் பாங்கியர்க் குணர்த்தி விடுத்தலும் பாங்கி நற்றாய்க் குணர்த்தலுமாகிய இரண்டும் மகிழ்ச்சிக்கும், நற்றாய் தலைமகனுளங்கோள் வினாதலொன்றும் வினாதற்கும், பாங்கியர்க்கு முன்சென்றோருணர்த்தலொன்றுஞ் செப்பற்கு முரியன. மீட்சி முற்றிற்று. தன்மனை வரைதல். அஃதாவது-உடன்போய் மீண்டுவந்த தலைவன் றலைவியைத் தன்னுார்க்குக் கூட்டிப்போய்த் தன் மனையின்கண் வரைந்து கோடல். அது - வினாதல் செப்பல் மேவலென மூன்று வகைப்படும்; அவை-நற்றாய் மணமயர் வேட்கையிற் செவிலியை வினாதல்முதல் பாங்கி தானது முன்னே சாற்றிய துரைத்தலீறாகிய ஐந்துவிரிகளை யுடையன; அவை வருமாறு:- - நற்றாய் மணமயர் வேட்கையிற் செவிலியை வினாதல். (இ- ள்.) தலைவி நற்றாய் தன்மனையின் மணஞ் செய்யும் விருப்பினாற் செவிலியை வினாவுதல். நம்மனைக் கோவன்றி நாளு மவரை நயந்தளித்தார் தம்மனைக் கோமணஞ் சாரற் கியன்ற தனித்தவமோங் கம்மனைக் கோபுரக் கோன்ஷம்சுத் தாசி னருட்கிரிவா யெம்மனைக் கோமட வாயறி யேம்வந்திங் கெய்துவதே. (357) 162